This page has been proofread, but needs to be validated.
114
பழமொழி.
  1. ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இடுகுமரி.
    The maiden who was given in marriage was equal to all the exigencies of life.

  2. ஈந்து பார்த்தால் இம்மி வெளி ஆகும்.
    The smallest fraction will come out by division.
    இம்மி = 1,075,200th part of a unit.

  3. ஈப்பிசினி இரப்பதுகூடக் கக்கிசம்.
    A miser will find even begging difficult.

  4. ஈயத்தைக் காய்ச்சலாம் இரும்பைக் காய்ச்சலாமா?
    Lead may be melted; can iron?

  5. ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான்.
    He who has taken up lead will not listen, no matter what is said to him.

  6. ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.
    A niggardly savage is nowhere found.

  7. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்.
    The wicked obtain by rapacity what the miserly accumulate.

  8. ஈயார் பொருளுக்குத் தீயார்.
    The wicked enjoy the property of the miser.

  9. ஈயும் எறும்பும் எங்கும் உண்டு.
    Flies and ants abound every-where.

  10. ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.
    If you catch a fly, its limbs will be separated.

  11. ஈயைப்போலே சுத்தமும் எறும்பைப்போலே பலமும்.
    Clean as a fly and strong as an ant.

  12. ஈரச்சீலையைப்போட்டுக் கழுத்து அறுப்பான்.
    He will cut the throat after tying a wet cloth round it.

  13. ஈர நாவுக்கு எலும்பு இல்லை.
    There is no bone in a slanderous tongue.