This page has been proofread, but needs to be validated.
120
பழமொழி.
  1. உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.
    Friendship is promoted and strengthned by hospitality and also by intermarriage.

  2. உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.
    When you eat, do so to keep up your strength.

  3. உண்டாற் கொல்லும் விஷம்.
    Poison destroys when taken.

  4. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
    Moderation in food becomes women.

  5. உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?
    When you are told to eat heartily and remain in-doors, why do you rise up and jump?

  6. உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.
    If I say eat and sit on the hanging-shelf, you fall to the ground.

  7. உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.
    If a crab gets fat, it will not stay in its hole.

  8. உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?
    What business has he in the village seeing that he is grown up?

  9. உண்ணக் கை சலித்து இருக்கிறான்.
    His hand is weary with eating.

  10. உண்ண வா என்றால் குத்த வருகிறாய்.
    When I call you to eat, you come to strike me.

  11. உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக்குறி இடுவேன்.
    I will cut your uvula and smear it with chunam-lime.

  12. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
    Property not enjoyed comes to nought.