This page has been proofread, but needs to be validated.
136
பழமொழி.
  1. ஊசி மலிவென்று சீமைக்குப் போகலாமா?
    May one go to a foreign country to buy needles because they are there cheap?

  2. ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும்!
    Though penance be performed by standing on the point of a needle, that which is predestined only will be obtained.

  3. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா?
    Can a camel pass through the eye of a needle?

  4. ஊசியை ஊசிக்காந்தம் இழுக்கும், உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
    A magnet attracts a needle, friendship, the good.

  5. ஊணன் கருமம் இழந்தான், உலுத்தவன் பெயர் இழந்தான்.
    The glutton failed in his object, and the miser lost his fame.

  6. ஊணினால் உறவு பூணினால் அழகு.
    Friendship is promoted by entertainments, and beauty is set off by ornaments.

  7. ஊணினால் புத்தி பூணினால் சாதி.
    Good sense is indicated by food, and rank by ornaments.

  8. ஊணுக்கு முந்த வேண்டும் கோளுக்குப் பிந்தவேண்டும்.
    Be first at a feast, and the last to slander.

  9. ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.
    Neither food nor sleep.

  10. ஊண் அற்றபோதே உறவும் அற்றுப்போம்.
    When entertainment is discontinued, friendship ceases.

  11. ஊண்பாக்கு ஒழிய வீண்பாக்கு ஆனது.
    Betel is not good except after food.

  12. ஊத அறிந்தவன் வாதி உப்பு அறிந்தவன் யோகி.
    He is an alchemist who knows how to infuse metals, and he is a Yogi who knows the quality of salt.