This page has been proofread, but needs to be validated.
142
பழமொழி.
  1. ஊர் ஓரத்திற் கொல்லை உழுதவனுக்குப் பயிர் இல்லை.
    He that cultivates a field on the outskirts of a village loses its produce.

  2. ஊர் கூடிச் செக்குத் தள்ளினாற்போல.
    As if a whole village united to put an oil-press in motion.

  3. ஊர்க்குருவிமேல் ராமபாணம் தொடுக்கிறதா?
    What, discharge Ráma's arrow at a sparrow?
    Why lavish means so precious on objects so mean?

  4. ஊர்க்கோழியும் நாட்டுக்கோழியும் கூடி உரலிற் புழுங்கல் அரிசிக்குச் சேதம்.
    When the poultry of the village and the poultry of the country at large come together, the rice in the mortar is spoiled.

  5. ஊர் நஷ்டம் ஊரிலே தேர் நஷ்டம் தெருவிலே.
    Loss occurring in a village affects the community, injury occasioned by a temple car is apparent in the street.

  6. ஊர் நல்லதோ வாய் நல்லதோ?
    Is the village good or your description?

  7. ஊர்ப்பிள்ளையை முத்தமிட்டால், உதட்டுக்குக் கேடு.
    To kiss the child of another is bad for the lips.

  8. ஊர்வாயைப் படலிட்டு மூடலாமா?
    Is it possible to shut the mouth of a village by a hurdle?

  9. ஊர் வாழ்ந்தால் ஒட்டுப்பிச்சைக்கும் வழி இருக்கும்.
    If the village be prosperous—there. will be an opening for alms-dishes.

  10. ஊழிக்காய்ச்சல் அதிகம் ஆனால் சூனியக்காரன் கொள்ளை.
    When epidemic fever prevails, sorcerers abound.

  11. ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல்.
    Though the world come to an end do not remit your efforts.