This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
175
  1. ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.
    He weeps when the word money is uttered.

  2. ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி புரை.
    One drop of butter-milk to a pot of milk.

  3. ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா?
    Can a fort be taken with one ball?

  4. ஒரு குலத்திற் பிறந்த தாமரையும் அல்லியும் ஒரே தன்மையுடையதல்ல அதுபோல ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர் இருப்பார்கள்.
    The lotus flowers of a tank are not all of the same species, so the children of the same mother are not all alike.

  5. ஒரு கூடு முடைந்தவன் ஒன்பது கூடு முடைவான்.
    He who has platted one basket may plat nine.

  6. ஒரு கூடை கல்லும் தெய்வமானால், கும்பிடுகிறது எந்தக்கல்லை?
    If all the stones in a basket be gods, which shall I worship?

  7. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
    Can clapping be effected by one hand?

  8. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா, இருகை தட்டினால் ஓசை எழும்புமா?
    Can clapping be effected with one, or with both hands?

  9. ஒரு கை முழம் போடுமா?
    Can cubits be measured with only one arm?

  10. ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?
    When one has fallen into a well in a fit of anger, will a thousand joyous considerations help him out?

  11. ஒரு சட்டியிலே இரண்டு தைலம்.
    Two kinds of oil in one chatty.