This page has been proofread, but needs to be validated.
228
பழமொழி.


  1. காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம்.
    The debt will be discharged in either case, whether the jungle or highland yield a good crop.

  2. காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?
    Though the waste land has yielded nothing, will the tax be remitted?

  3. காடு வெந்தாற் சந்தன மரமும் வேகாதோ?
    Should the jungle be consumed, would the sandal wood tree escape?

  4. காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்.
    If a quail crosses one's path to the left, he will govern a province.

  5. காட்டிக் கொடுத்துக் கடக்கப் போய் நிற்கலாமா?
    Is it proper to betray one, and then stand aloof?

  6. காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறதா?
    Is it to give a girl in marriage when an elephant in the jungle is shown as dower?

  7. காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான் தீட்டு.
    Though a man dies in the jungle, ceremonial uncleanness will attach to his house.

  8. காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?
    Does the wild cat observe the fast of Sivaratri?

  9. காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
    Moonlight in the jungle and rain in the plains.

  10. காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
    When wild plantains come, domestic prosperity will vanish.

  11. காட்டுப் பேய்ச்சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
    Is a wild gourd fit for curry?