TAMIL PROVERBS.
13
-
- அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி.
- What he received for his labour (ploughing) only paid for the kanji he drank.
-
- அடித்துப் பழுத்ததும் பழமா?
- Is that which ripens by force fruit?
- (A favour done under constraint is no favour.)
-
- அடித்துப் பால் புகட்டுகிறதா?
- Is a child to be beaten in order to pour milk into its mouth?
-
- அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் செவ்வையாகா.
- Neither the child that is unchastised, nor the mustache that is untwirled will be right.
- Implying that due care must be exercised to secure a desiderated result.
-
- அடித்துவிட்டவன்பின்னே போனாலும், பிடித்துவிட்டவன்பின்னே போகலாகாது.
- Though you may trust one who has administered correction, you may not trust one who has betrayed you.
-
- அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா?
- What! is it nectar at the tip of the tongue while poison is at the root?
- Said of one, or to one whose professions are at variance with his intentions.
-
- அடி நொச்சி நுனி ஆமணக்கா?
- Is the stem nochchi, and the top a castor plant?
- Intimating that the same characteristics will prevail in a family or tribe.
-
- அடிப்பானேன் பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம்.
- Why beat him, why seize him? we will subdue him by proper means.
-
- அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்.
- Even a grindstone will move under repeated strokes.