This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
303
  1. சினேகம் செய்தபின் சோதி தெரிந்தபின் நம்பு.
    On forming friendship try it, and on being convinced of its sincerity, rely on it.

  2. சிந்த அறுந்துபோகிற மூக்கு எந்த மட்டும் இருக்கும்?
    How long will the nose last that breaks off on blowing?

  3. சிப்பியிலே விழுந்த மழைத் துளி முத்தாகும்; அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி நிலைநிற்கும்.
    A rain drop that falls on an oyster-shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.

  4. சிம்பிலே வளையாதது தடித்தால் வளையபோகிறதா?
    If when it is a twig it cannot be bent, will it bend when it has become a large tree?

  5. சிரைத்தால் மொட்டை வைத்தாற் குடுமி.
    If shaven-bald, if kept, kudumi.

  6. சிரைத்தால் கூலி சேவித்தாற் சம்பளம்.
    If you shave, hire; if you serve, wages.

  7. சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?
    Is a woman who pilfers aware what expense means?

  8. சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல.
    As a bear entered at the time of Siva puja.

  9. சிவபூசை வேளையிலே கரடியை விட்டு ஆட்டுகிறதா?
    Is a dancing bear produced at the time of Siva puja?

  10. சிவலிங்கத்தின் மேல் எலி.
    A rat on Siva linga.

  11. சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும் சுமக்கவும் வேண்டும்.
    If subject to a palanquin bearer, one must bear both palanquins and burdens.