This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
363
  1. துஞ்சி நின்றான் மிஞ்சி உண்ணான்.
    He that is addicted to sleep loses his appetite.

  2. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
    Unsympathizing wives are like fire in the bosom.

  3. துடுப்பு இருக்க கை வேவானேன்?.
    Why should the hand be burnt when there is a ladle?

  4. துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.
    Like tying a silk tassel to a broomstick.

  5. துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம்.
    To the wicked, punishment, to the good, protection.

  6. துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்
    The people of the village will reprove a wicked child.

  7. துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும் துலுக்கக்குட்டி மாத்திரம் ஆகாது.
    Though girls may be had at a pie a head, a Muhammadan girl is undesirable.

  8. துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை, அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.
    An impudent woman has no shame, a weeping woman has no sorrow.

  9. துணிந்தார்க்குத் துக்கம் உண்டா? பணிந்தார்க்குப் பாடு உண்டா?
    Do the adventurous experience grief, or the humble, distress?

  10. துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை, அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.
    The adventurous know not sorrow, the sorrowful know not anger.

  11. துணைபோனாலும் பிணைபோகாதே.
    Though you may bear one company, do not become his security.