This page has been proofread, but needs to be validated.
456
பழமொழி.
  1. பூரியோர்க்கு இல்லைச் சீரிய ஒழுக்கம்.
    The base are void of good manners.

  2. பூர்வோத்தரம் மேரு காத்திரம் போல் இருக்கிறது.
    His pedigree is weighty as mount Meru.

  3. பூலோகமுதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்.
    His title is lord of the world, but when examined he is found empty.

  4. பூ விற்கும் கடையில் புல் விற்பதுபோல.
    As grass is sold in a flower market.

  5. பூ விற்ற கடையில் புல் விற்கலாமா?
    May grass be sold in the flower market?

  6. பூ விற்ற காசு மணக்குமா புலால் விற்ற காசு நாறுமா?
    Is the money obtained from the sale of flowers fragrant, does that obtained from the sale of flesh stink?

  7. பூ விற்றவனைப் பொன் விற்கப்பண்ணுவேன்.
    I will enable him who sold flowers to sell gold.

  8. பூவுடன் கூடி நாரும் மணம் பெற்றதுபோல.
    As a fibre used for stringing flowers partook of their fragrance.

  9. பூவுள் மங்கையாம் பொற்கொடியாம் போன இடம் எல்லாம் செருப்படியாம்.
    It is said that she is Lackshmi residing in flowers, and she is a golden creeper, yet whithersoever she goes she is slippered.

  10. பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேர்த்தி எடுக்கிறதாம்.
    The rat lives to see its grand-sons and grand-daughters in a place where there is a cat.

  11. பூனை கட்டும் தொழுவத்தில் ஆனை கட்டலாமா?
    Can you tether an elephant in a place suited for tying up a cat?

  12. பூனைக்கு இல்லை தானமும் தவமும்.
    Alms-giving and penance are not prribed to cats.