This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
469
  1. பொற் பூ வாசிக்குமா?
    Does a golden flower diffuse fragrance?

  2. பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
    The ornament of reputation is greater than ornaments of gold.

  3. பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?
    Gold may be lent, can flowers?

  4. பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
    If the word gold be uttered, even a corpse will open its mouth.

  5. பொன்கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?
    May one cut his throat with a knife because it is made of gold?

  6. பொன் காத்த பூதம்போல.
    Like the demon that guarded treasure.

  7. பொன்செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்.
    Though golden slippers, they must be put on the feet.

  8. பொன்மணி அற்றவளை அம்மணி என்பானேன்?
    Why should a woman who has no gold beads be called Ammani?

  9. பொன்முடி அல்லது சடை முடி வேண்டும்.
    One should wear either a gold crown, or matted hair.

  10. பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது?
    If one has a golden house, what house can he not get?

  11. பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.
    The golden hall of-Chidambaram, and the town Puvanagiri, are always in trouble.

  12. பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.
    If acid be mixed with ponnánkáni-Illecebrum sessile-its flavour will be agreeable to the whole palate.