This page has been proofread, but needs to be validated.
84
பழமொழி.
  1. ஆறு நிறையப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்.
    Though the river is full to overflowing, a dog laps.
    Amid the greatest abundance one can only enjoy what is required.

  2. ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ ?
    Having swum a river, will it be difficult for me to swim over a tank?

  3. ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு ?
    What is a mere channel to him who has swum a river?

  4. ஆறு நேராய்ப் போகாது.
    A river never flows straight.

  5. ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.
    A town in the course of a river will not endure.

  6. ஆறு பார்க்க போக ஆய்ச்சிக்குப் பிடித்தது சலுப்பு.
    The old dame caught a cold by going to look at the river.

  7. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
    The flow of a river is its course, the utterance of a ruler is his decision.

  8. ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?
    Can a six months journey be accomplished if the party walks hesitatingly?
    An arduous enterprise requites unremitted exertion.

  9. ஆறு மாதம் காட்டிலே, ஆறு மாதம் வீட்டிலே.
    Six months in the jungle and six at home.

  10. ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.
    As Saturn seized one for six months together.

  11. ஆறும் கடன் நூறும் கடன் பெருக்கச் சுடெடா பணிகாரத்தை
    Debt is debt whether it amounts to six or a hundred; you fellow bake the cakes large.