This page has been proofread, but needs to be validated.
86
பழமொழி.
  1. ஆற்றிற் பெருவெள்ளம் நாய்க்கென்ன சளப்புத் தண்ணீர்.
    The river is in flood, but what of that to a dog? it is only a fordable stream.

  2. ஆற்றுக்குப் பார்ப்பான் துணையோ, சோற்றுக்குப் பயற்றங்காய் கறியா ?
    Will a Brahman be of any use when one crosses a river, or pulse in pod serve for a curry?

  3. ஆற்றுக்கும் பயம் காற்றுக்கும் பயம்.
    Both the river and weather are dreaded.

  4. ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.
    I neither went to the river, nor put off my shoes.

  5. ஆற்றுப்பெருக்கும் அரசும் அரை நாழி.
    The flood of a river and the reign of a king last but half an hour.

  6. ஆற்று மணலை அளவிடக்கூடாது.
    The sands of a river cannot be counted.

  7. ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ எடுத்துக் குடிக்குமோ ?
    How does a dog drink the water of a river, by lapping or by lading?

  8. ஆற்றைக் கடந்தால்லோ அக்கரை ஏறவேண்டும் ?
    Before ascending its opposite bank it is necessary first, is it not, to cross the river?

  9. ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
    After crossing the river the boatman gets a cuff.

  10. ஆற்றைக் கடத்திவிடு ஆகாசத்திற் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான்.
    He says, carry me over the river and I will give you a pill that will enable you to fly through the air.

  11. ஆனதல்லாமல் ஆவதறிவாரோ ?
    Can one comprehend the future as well as the past?