This page has been proofread, but needs to be validated.
100
பழமொழி.
  1. இராசன் செங்கோல் தன் நாடுவரையில்.
    A king’s sceptre extends to the limit of his territory.

  2. இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்
    Though a princess, she is the wife of the man who has taken her in marriage.

  3. இராசாளியைக் கண்ட கொக்குப்போல.
    Like a heron which saw a falcon.

  4. இராசா கடன்படப் புளுக்கை காடித்தண்ணீர் குடித்ததுபோல.
    As a slave lived on gruel because the king was in debt.

  5. இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.
    It is said that he who starved the whole night inquired if peeled plantains could be obtained.

  6. இராப்பட்டினி கிடப்பவன் அகவிலை கேட்பானோ ?
    Does he who lies down at night fasting, enquire after the price of grain?

  7. இராப்பட்டினி பாயோடே.
    The sense of hunger ends on the mat.

  8. இராப்பகல் கண்ணிலே.
    In the eye night and day.

  9. இராமர் இருந்த இடம் அயோத்தி.
    Ayodhya was the city of Ràma.

  10. இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.
    Acquiescence with the wishes of his wife was fatal to Ràma.

  11. இராமனைப்போல ராஜா இருந்தால் அனுமானைப்போலச் சேவகனும் இருப்பான்.
    If the king be equal to Ráma, his servant may be equal to Hanumàn.
    Hanumán was the monkey chief, ally of Rama in his expedition against Lanka.