TAMIL PROVERBS.
111
-
- இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.
- The child of the dead is the ward of the living.
-
- இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்.
- Sessamum and water offered to the dead.
-
- இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.
- A family out of debt is out of danger.
-
- இறுப்பானுக்குப் பணமும் கிடையாது. உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது.
- He who pays his debts cannot obtain money, nor can the labourer obtain a wife.
-
- இறைச்சி தின்கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.
- They who live on flesh are acquainted with the medicine for tooth-ache.
-
- இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக்கொள்ளலாமா?
- Is one to wear a neck-lace of bones because he eats flesh?
- This and the preceding proverb are somewhat singular but not unnatural among a vegetarian people.
-
- இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.
- The water of a well always drawn, is fresh, that of a well not drawn is fetid.
-
- இறைத்த கிணறு சுரக்கும்.
- The water of a well always drawn springs up a-fresh.
-
- இனம் பிரிந்த மான்போல.
- Like a deer separated from its herd.
-
- இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?
- Hereafter is it to lift up the hands to a god?
-
- இனிமேல் எமலோகபரியந்தம் சாதிக்கலாம்.
- Hereafter he may effect his purpose as far as the realms of Yama.