This page has been proofread, but needs to be validated.
176
பழமொழி.
  1. ஒரு சந்திப்பானை நாய் அறியாது.
    A dog does not know the vessels used on fast-days.
    Separate vessels are kept for special occasions, and also for different purposes on ordinary days, as for boiling milk &c.

  2. ஒரு சாண் காட்டிலே ஒரு முழத்தடி வெட்டலாமா?
    Can a stick a cubit long be cut in a grove a span high?

  3. ஒருதரம் விழுந்தால் தெரியாதா?
    Having fallen once are you not wiser?

  4. ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை.
    An ex parte statement is straighter than a line.

  5. ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?
    Are there two punishments for one head?

  6. ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய்.
    The whole village is mother to the motherless.

  7. ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
    Think of those who have done you even one favour as long as you live.

  8. ஒரு நாட் கூத்துக்குத் தலையைச் சிரைத்ததுபோல்.
    Like shaving the head for a single day’s dance.

  9. ஒரு நாளைக்கு இகழ்ச்சி ஒரு நாளைக்குப் புகழ்ச்சி.
    One day blame, another day praise.

  10. ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி பிறக்கிறது கோடி.
    Ten millions are born, and ten millions die, daily.

  11. ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான், திருநாளும் வெறுநாளாயிற்று.
    A man who had never laughed before, laughed on a festival day, consequently it became a common day.

  12. ஒரு நாளாகிலும் திருநாள்.
    Although only one day, it is a festival day.