This page has been proofread, but needs to be validated.
198
பழமொழி.
  1. கண்டு எடுத்தவன் கொடுப்பானா?
    Will he who finds and takes a thing give it up?

  2. கண்ணால் கண்டதற்குச் சாட்சியும் வேண்டுமா?
    Is a witness needed to prove that which one has seen with his own eye?

  3. கண்ணாற் கண்டது பொய் அகப்பைக்குறி மெய்
    That which one has seen is false, the sign of agappai is true.

  4. கண்ணாற் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி?
    Why the sign of an agappai in proof of that which one has seen?

  5. கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு.
    That one has not seen with his own eye amounts to one third.

  6. கண்ணாலே சீவன் கடகட என்று போனாலும் வண்ணான் கழுதை சுமந்தே தீரவேண்டும்.
    The ass of a washerman must carry the pack through, though its life may depart with a rattling noise through the eyes.

  7. கண்ணான பேர்களை மண்ணாக்குகிறான்.
    He treats as common earth those who are precious as the eyes.

  8. கண்ணான மனதைப் புண்ணாக்குகிறான்.
    He wounds the heart which is as tender as the eye.

  9. கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு.
    Though the life of the washerman is forced through his eyes by reason of drought, rain to him would be poison.

  10. கண்ணாடி நிழலிற் கண்ட பணம் கடனுக்கு உதவுமா?
    Will the money reflected in a mirror avail for the payment of debt?

  11. கண்ணான பேர்களைப் புண்ணாக்கினாய்.
    You have wounded your dearest friends.