This page has been proofread, but needs to be validated.
224
பழமொழி.
  1. கன்று இருக்கக் காசத்தனை பால் கறவாப் பசு, கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா?
    Will a cow that gave milk worth a small coin while its calf lived, give a kalam after her calf is dead?

  2. கன்றுக்குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா கட்டுத்தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?
    Did they tell you to loose the calf or to pull up the peg?

  3. கன்றும் பசுவும் காடேறி மேய்ந்தால் கன்று கன்று கன்றுவழியே பசு பசு வழியே
    When the calf and cow go out to graze, each takes its own way.

  4. கன்றுகளாய்க் கூடிக் களை பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா செத்தை ஆகுமா?
    If a herd of calves weed the corn, will there be any straw, or even dry stubble?

  5. கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப்போலே.
    Like a cow that comes running on seeing her calf.

  6. கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான்.
    When the brazier begins to move, the potter will abandon his dwelling-place.

  7. கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.
    As an ass went on a pilgrimage before a copper-smith.

  8. கன்னி இருக்கக் காளை மணம் போகலாமா?
    When a virgin is yet unmarried, may the youth-her brother-marry?

கா.

  1. காகத்திலே வெள்ளை உண்டா?
    Are there any white crows?

  2. காகத்தின் கண்ணுக்குப் பீர்க்கம்பூ பொன் நிறம்.
    To the eye of a crow the flower of the gourd is tinged with gold.