This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
259
  1. குளத்தோடு கோபித்துக் கால் கழுவாதவன்போல்.
    Like the man who would not wash his feet in the tank because he was angry with it.

  2. குளப் படி நீர் இறைத்தாலும் கடற் பள்ளம் நிரம்புமா?
    Will the hollow of the sea be filled by draining a tank down to the lowest step?

  3. குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?
    When a tank bursts, do they dispute about turns?

  4. குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ?
    Will not he who watches the tank drink?

  5. குளம் வற்றியும் முறைவீதம் உண்டா?
    Why dispute about your turn for drawing water seeing that the tank is dried up?

  6. குளம் வெட்டுமுன்னே முதலை குடி இருக்குமா?
    Before the tank is dug will the alligator go to dwell therein?

  7. குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தாற்போல.
    Like poking a wasp's nest with a stick.

  8. குளவிக் கூட்டிலே கல்லுவிட்டு எறிகிறதா?
    What! throw a stone at a wasp's nest?

  9. குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை.
    A green caterpillar is the offspring of a wasp.

  10. குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவதுபோல.
    Like a wasp changing worms to its own colour.

  11. குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டது போல.
    As one smeared himself with mud After bathing.

  12. குளிர்ந்த கொள்ளியாய் இருந்து குடியைக் கெடுக்கலாமா?
    Pretending to be an extinguished firebrand, is it proper to destroy the house?