This page has been proofread, but needs to be validated.
274
பழமொழி.
  1. கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.
    One must have an umbrella in the hand, and shoes on the feet.

  2. கையிற் கிடைத்த அமுதைக் கமரில் ஊற்றலாமா?
    May one pour into the cracked ground the nectar he has in his hand?

  3. கையிற் காசு வாயில் தோசை ஆமா?
    Will the money in the hand become a cake in the mouth?

  4. கையும் கணக்கும் சரி.
    The money in hand is just sufficient for current expenses.

  5. கையைப் பார் முகத்தைப் பார் என்று இருந்தாற் காரியம் ஆகுமா?
    If you say look at the hands and look at the face, will the work be accomplished?

  6. கைவினை கரவேல்.
    Neglect not a work in which you are skilful.

கொ.

  1. கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ நெருப்பிற் குதிப்பார்க்குச் சுவர்க்கமோ?
    Which attains swerga the mere boaster, or the self-immolated?

  2. கொக்கு இளங்குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை.
    No one has seen a young crane, not a straight cocoanut tree.

  3. கொக்குக்கு உண்டா வீர சைவம்?
    Does the stork observe the rules of Linga-worship?
    The strict Saivite is a rigid vegetarian.

  4. கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.
    As if a falcon fell among herons.

  5. கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.
    As if a bandycoote rushed on to prey on a stork.