This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
277
  1. கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.
    They praise the liberal, but reproach the niggard.

  2. கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.
    The liberal are fathers, niggards are useless.

  3. கொடுத்ததைக் கொடுக்கும் குறளிப் பிசாசு.
    The dwarf demon returns only that which had been given to it.
    Jugglery is generally attributed by the common people to the power of a dwarf demon which, retaining the materials entrusted to it, gives them one by one to the juggler as he may want them.

  4. கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.
    The liberal have all things, the niggardly nothing.

  5. கொடுத்து உறவுகொள், கோளன் என்று இரேல்.
    Be liberal and friendly, avoid being called a talebearer.

  6. கொடுப்பாரைத் தடுக்காதே.
    Do not check the liberal.

  7. கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.
    The kind-hearted is yielding.

  8. கொடும் பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும்.
    However cruel a mother-in-law may be, she is nevertheless desirable.

  9. கொட்டிக்கிழங்கு வெட்டுகிறவளுக்குக் கோயிலில் வந்து ஆடத்தெரியுமா?
    Can the woman who digs up roots dance before a temple idol?

  10. கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
    Though measured again and again, a kuruni will not become a pathakku.

  11. கொட்டினால் தேள் கொட்டா விட்டாற் பிள்ளைப்பூச்சியா?
    If it stings it is scorpion, if it does not sting is it only a gryllus?