This page has been proofread, but needs to be validated.
298
பழமொழி.
  1. சாணான் எச்சில் கருப்புக்கட்டி, சர்க்கரை வெல்லம் உழவன் எச்சில்.
    Course sugar is defiled by a chanan’s-tree climber-saliva, and sugar by that of a ploughman.

  2. சாணிக் குழியும் சமுத்திரமும் சரியாய் நினைக்கலாமா?
    Can you imagine the ocean and a dung-pit to be of equal magnitude?

  3. சாணிச் சட்டியும் சருவச்சட்டியும் சரியாமா?
    Can you compare a cow-dung chatty with a brass pan?

  4. சாணியும் சவாதும் சரியாகுமா?
    Are dung and civet alike?

  5. சாணுக்குச் சாண் வித்தியாசம்.
    It differs at every span-length.

  6. சாணோ வயிறு சரீரம் எல்லாம் வயிறோ?
    Is your stomach a span-long, or are you all stomach?

  7. சாண் ஏற முழம் சறுக்குகிறது.
    To advance a span, and slide back a cubit.

  8. சாண் கற் கழுவினால் முழச்சேறு.
    In every span of pavement I wash, there is a cubit of deep mud.

  9. சாண் குருவிக்கு முழ வாலாம்.
    It is said that a span-long bird has a cubit-long tail.

  10. சாண் சடைக்கு முழக் கயிறா?
    What, a cubit of string for a span of matted hair?

  11. சாண் செடியிலே முழத் தடி வெட்டலாமா?
    Can a stick a cubit long be cut in a span-long copse?

  12. சாண் பறைக்கு முழத் தடி.
    A cubit stick for a span drum.