This page has been proofread, but needs to be validated.
316
பழமொழி.
  1. செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?
    Will conspiracy against a just administration avail?

  2. செங்கோல் ஓங்குவன் திரித்துவ தேவன்.
    He who holds the sceptre is the triune God.

  3. செங்கோல் கோண எங்கும் கோணும்.
    If the sceptre turn aside, its effect will be felt every where.

  4. செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
    If it would not bend as a sapling, will it bend as a tree?

  5. செட்டிக்கும் மட்டிக்கும் சென்மப் பகை.
    The merchant and the farmer cherish innate hatred towards each other.

  6. செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.
    The merchant has a natural aversion to agriculture.

  7. செட்டி கூடிக் கெட்டான் சேணியன் பிரிந்து கெட்டான்.
    The Chetty was ruined by taking a partner, the weaver by separating from one.

  8. செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற் பணம்.
    Wherever the merchant goes there is a discount of a quarter fanam.

  9. செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் காலைக் குறைத்தான்.
    The merchant reduced the money, the weaver lessened the width of the cloth.

  10. செட்டி படை வெல்லுமா, சேற்றுத் தவளை கடிக்குமா? .
    Can merchants disperse an army, can a toad inflict a wound?

  11. செட்டி சிங்காரிக்கிறதுக்குள்ளே பட்டணம் பறிபோகிறது.
    While the Chetty is adorning himself, the city is besieged.