This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
325
  1. சொல்லச் சொல்லப் பட்டி பெண்ணைப் பெண்ணைப் பெற்றாள்.
    Though again and again forbidden, Patti-a strumpet-brought forth only daughters.

  2. சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்கிறான்.
    Though frequently forbidden, Matti-a fool-eats earth.

  3. சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.
    He who is of few words is a pundit.

  4. சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர், சொல்லியும் செய்யார் கயவர்.
    Inferiors may keep their word, the great do a thing without promising, but the wicked act not even after making a promise.

  5. சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில்?
    How long will the words put into one’s mouth, and the rice tied up for a journey avail us?

  6. சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று.
    Saying one thing, and doing another.

  7. சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான் சோதிக்கும் சாதிக்கும் நடுவானான்.
    He whom neither language nor wealth can influence, has come between God and man.

  8. சொல்லும் சொல் ஆக்கமும் கேடும் தரும்.
    A word uttered may bring wealth as well as ruin.

  9. சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.
    Learning is conversant with words and things.

  10. சொல் வல்லனை வெல்லல் அரிது.
    It is difficult to overcome the eloquent.

  11. சொல்வளம் இல்லா நற்கதை சொல்லில் அதுவே துர்க்கதை.
    A good story badly told, soon loses its effect.