This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
327
  1. சொன்னால் வெட்கம்; அழுதால் துக்கம்.
    It is shameful to tell it, and painful to weep over it.

  2. சொன்னாற் பெரும்பிழை சோறென்றாற் பட்டினி.
    As regards rice, he is famishing, but it would be a fault to say so.

சோ.

  1. சோம்பல் இல்லாத் தொழில் சோதனை இல்லாத் துணை.
    Untiring service is reliable help.

  2. சோம்பலுக்குத் தொடர்ச்சி வறுமை; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி மூடம்.
    Indolence leads to poverty, inaction to ignorance.

  3. சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
    Indolence is the parent of want.

  4. சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
    The sluggard eats his plantain, skin and all.

  5. சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?
    Is it the realm of Chola, or the realm of deceit?

  6. சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?
    Is it after snatching away his bag one gives alms to a beggar?

  7. சோறு என்ன செய்யும் சொன்னவண்ணம் செய்யும்.
    What can rice effect? whatever you like.

  8. சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா?
    If rice be spilt it may be picked up, but if one loses his sense of honour can he recover that?

  9. சோறு சிந்தினால் பொறுக்கலாம் நீர் சிந்தினால் பொறுக்கலாமா?
    If rice be spilt it may be picked up, can water?