This page has been proofread, but needs to be validated.
358
பழமொழி.
  1. திருட்டுப் பயல் கலியாணத்தில் முடிச்ச அவிழ்க்கிற பயல் பெரியதனம்.
    At the marriage of a thief, the pickpocket is the chief guest.
    Literally, the thievish fellow who unties a knot. Money or other valuables being often carried in the corner of the cloth worn as a dress, or in the corner of a handkerchief.

  2. திருட்டுப் பூனைக்குப் போடு திரட்டுப் பாலும் சோறும்.
    Put thick milk and rice before a thievish cat.

  3. திருத்தி இல்லாத எசமான் வீண்.
    A master whom it is hard to please is useless.

  4. திருநாளும் முடிந்தது எடுபிடியும் கழிந்தது.
    The festival is over, the bustle has ceased.

  5. திருநாளுக்கு போகிறையோ தின்னுதலுக்குப் போகிறையோ ?
    Do you go to celebrate the holy day, or for the sake of food?

  6. திருநீற்றிலே ஒட்டாது சுழற்சிக்காய்.
    Holy ashes will not adhere to a killachi-kái.

  7. திருந்த ஓதத் திரு உண்டாமே.
    The correct utterance of mantras secures the divine favour.

  8. திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.
    Though taken to Tripati, a broom will fetch only a cash.

  9. திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றதா, ஶ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரித்ததும் பற்றாதா ?
    Is it not enough to have been shaven bald at Tirupati and disgraced at Shrírangam?

  10. திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா ?
    Did you see the baldheaded Vaishnava mendicant at Tripati?

  11. திருவன் கண்ட பச்சையாய்ப் போயிற்று.
    It has become an emerald discovered by the king’s jester.