This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
395
  1. நாய் வாசலைக் காத்து என்ன, கை இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?
    What avails the waiting of a dog at the door, or the expectations of one who, having no hands, waits on the rich?

  2. நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?
    Can you change the shape of a dog’s tail?

  3. நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?
    May you descend into a river holding on by a dog’s tail?

  4. நாய் வாழ்ந்து என்ன, பூனை தாலி அறுத்து என்ன?
    What though a dog prosper, or a cat be bereft of her táli?

  5. நாய் வேஷம் போட்டால் குலைக்கவேண்டும்.
    If you assume the guise of a dog, you must bark.

  6. நார் அற்றாற் கூடும் நரம்பு அற்றாற் கூடுமா?
    If a fibre snap it may be united, if a tendon break can it be united?

  7. நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
    If relationship be traced to the fourth generation, even a barber may become an uncle.

  8. நாலாவது பெண் நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை.
    A fourth born girl will not afford means even to procure a staple for a bolt.

  9. நாலு ஆறு கூடி ஒரு பாலாறு ஆயிற்று.
    If four rivers unite, the stream will be equal to the Pálár.

  10. நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே சோறு.
    A woman who has borne four children, eats her rice in the middle of the street.

  11. நாலு பேர் கூடினது சபை.
    The meeting of four persons is an assembly.