This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
405
  1. நீலம் கட்டுப்படப் பேசுகிறது.
    To speak so as to confine the blue dye to the skirts of the cloth.

  2. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே.
    A termagant has her tears in the eyelids.

நு.

  1. நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.
    The shrewed are successful.

  2. நுண்ணிய ஞானம் உரைப்பார்கள் சொன்னதில் ஒன்றும் நடவார்கள்.
    They give wise counsels, but they themselves walk not according to any one of them.

  3. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
    Although a small thing, do it after due thought.

  4. நுண்பொருள் கொடுத்து நுண்ணியராவர்.
    They become possessed of discrimination by imparting instruction on abstruse subjects.

  5. நுண்மை நுகரேல்.
    Be not particular in food.

  6. நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.
    The affluence of this world is as froth.

  7. நுரையைத் தின்றால் பசிபோகாது.
    Hunger cannot be satisfied by eating froth.

  8. நுழை விட்டு செய் நூல் கற்று அடங்கு.
    Build a house with an entrance, acquire learning and be humble.

  9. நுளையன் அறிவானா ரத்தினத்தின் பெருமை?
    Does a fisherman understand the value of gems?