This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
407
  1. நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.
    When he is worth a hundred, a word, when a thousand, a mere nod.

  2. நூற்றைக் கெடுத்தது குறுணி.
    One measure of chaff spoiled a hundred of grain,

  3. நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.
    Ascertaining the rules of the Veda, live virtuously.

நெ.

  1. நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?
    May one tell a lie knowingly?

  2. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
    There is no deceit which can be concealed from the mind.

  3. நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியும்.
    It will be known in the river, who is tall and who is short.

  4. நெடும் கடல் ஓடியும் நிலையே கல்வி.
    Though you may cross the broad sea your learning will remain with you.

  5. நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.
    Even a long day has a sunset.

  6. நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?
    What has a weaver to do with a young monkey?

  7. நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல.
    As the ants swarm on a ghee pot.

  8. நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.
    If the ghee pot is broken, the dog has a feast.

  9. நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை.
    The breaking of the ghee pot, is a hunting excursion to the dog.