This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
421
  1. பட்டுக்கு அழுவார் பணிக்கு அழுவார் வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டது இல்லை.
    There are who cry for a silk cloth, and there are who cry for ornaments; I never saw any one in the world cry for betel nut.

  2. பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணை எடுத்துக்கொண்டு திரிவதுபோல.
    Like lending a silk cloth to another, and wandering about carrying a seat with her.

  3. பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும் காற் காசுக் கந்தை ஓடி உலாவும்.
    The silk and the velvet are kept in a box, while a rag not worth a cash walks about the street.

  4. பட்டைக்குத் தக்க பழம் கயிறு.
    An old rope suited to the well-bucket.

  5. பணக்கள்ளி பாயில் படாள்.
    A niggardly woman will not lie on a mat.

  6. பணக்காரன் பின்னும் பத்துப் பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
    Ten follow after a moneyed man, and ten after a fool.

  7. பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
    Money is called a man-slayer.

  8. பணத்துக்கு ஒரு அம்பு கொண்டு பாழில் எய்கிறதுபோல.
    Like buying arrows at a fanam each, and wasting them.

  9. பணத்தைக் கொடுத்துப் பணிகாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்கவேண்டுமோ?
    Is it necessary for you to hide yourself in a bush, and eat the cakes for which you have paid?

  10. பணம் இருந்தால் பாக்ஷா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி.
    If I have money, Páchcha; if not money, Pakkiri.