This page has been proofread, but needs to be validated.
428
பழமொழி.
  1. பழங்கால் தூர்க்கவேண்டாம் புதுக்கால் வெட்ட வேண்டாம்.
    Do not fill up an old channel; do not cut a new one.

  2. பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.
    The chief of berries is the chilli.

  3. பழத்தேங்காயிலே தான் எண்ணெய்.
    Old cocoanuts yield oil.

  4. பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல.
    Like fruit slipping and falling into milk.

  5. பழம் புண்ணாளி பாதிவைத்தியன்.
    He who has an old sore is half a doctor.

  6. பழிக்கு ஆனோர் சிலர் பழி படுவோர் சிலர்.
    One hasty commits the crime, and another suffers the penalty.

  7. பழிப்பான கல்வி பாவத்தின் ஊற்று.
    Despicable learning is a fountain of sin.

  8. பழிப்பன பகரேல்
    Utter no reproach.

  9. பழுது செய்ததை அறிக்கை இடல் பாதி நிவிர்த்தி.
    The confession of a fault removes half its guilt.

  10. பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்து ஓலை சிரிக்கிறதாம்.
    It is said that the young palm leaf is laughing at the dry leaf because it is falling off.

  11. பழுத்த பழம் கொம்பில் இராது.
    Ripe fruit does not remain on the branch.

  12. பழைய கறுப்பன் கறுப்பனே பழைய மண்கிண்ணி மண்கிண்ணியே.
    My name old Karuppan is still my name, and my earthen basin is still my eating dish.