This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
445
  1. பித்தம் பத்து விதம்.
    Madness is of ten kinds i. e., many kinds.

  2. பித்தளை நாற்றம் அறியாது.
    Brass is innocent of its own odour.

  3. பித்தர்க்குச் சில புத்திகள் சொன்னால் பேச்சைக் கேட்பாரா?
    If advice be given to fools will they iisten to it?

  4. பித்தனுக்குத் தன் குணம் நூலினும் செவ்வை.
    The madman thinks his own character straighter than a line.

  5. பிரமசாரி ஓடம் கவிழ்த்ததுபோல.
    As the brahmachari upset the boat.

  6. பிரமா நினைத்தால் ஆயுசுக்குக் குறையா?
    If Brahma wills it, is there any chance of your life being short?

  7. பிழைக்கப்போன இடத்திலே பிழைமோசம் வந்ததுபோல.
    As a grave occurrence befell one in the place to which he had gone for a livelihood.

  8. பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறன் பணிசெய்வோன் காசுக்கு அழுகிறான்.
    The parent weeps on account of his child, the servant weeps for his hire.

  9. பிள்ளைக்கு விளையாட்டுச் சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.
    That which is sport to the child, is death to the mouse.

  10. பிள்ளை பதினாறு பெறுவாளென்று எழுதி இருந்தாலும், புருஷசன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்?
    Though it were written in the horoscope that she would have sixteen children, how could that be without a husband?

  11. பிள்ளை பெற்றவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.
    A parent and a cowherd know no shame.