This page has been proofread, but needs to be validated.
452
பழமொழி.
  1. புலி நகம் படாவிட்டாலும் அதன் மீசை குத்தினாலும் விஷம்
    Though one may escape the claws of the tiger, even the pricking of its whiskers will prove malignant.

  2. புலி் பசித்தால் புல்லுத் தின்னுமா?
    When the tiger is hungry, will he eat grass?

  3. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு இடம்.
    The crouching of the tiger is the prelude to a spring.

  4. புலிப் பால் குடித்தவன் போல் இருக்கிறான்.
    He is like one fed on tiger’s milk.

  5. புலியைப் பார்த்து நரி் சூடு இட்டுக் கொண்டதுபோல்.
    As the jackal branded itself in imitation of the stripes of a tiger.

  6. புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை.
    The base do not talk decently, nor do they heed oaths.

  7. புலையும் கொலையும் களவும் தவிர்.
    Avoid lies, murder and theft.

  8. புல் உள்ள இடத்தில் மாட்டை ஆட்டை மேய ஒட்டாது.
    It will not allow either sheep or cows to graze where there is grass.

  9. புல்லும் பூமியும் உள்ளமட்டும்
    As long as vegetation and the earth exist.

  10. புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ளமட்டும்.
    As long as vegetation, earth, rocks and the Cauvery exist.

  11. புல்லு விற்கிற கடையிலே பூ விற்கிறது.
    Selling flowers in a grass market.

  12. புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா?
    Will the red dog that eats tiger's flesh prove as useful as the cow that eats grass?