This page has been proofread, but needs to be validated.
30
பழமொழி.
  1. அரசன் அளவிற்கு ஏறிற்று.
    It reached even the king.

  2. அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.
    A country without a king, a family without a head.

  3. அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.
    The sky is the witness regarding the king’s property.

  4. அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
    The king kills at once, God delays and kills.

  5. அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.
    If it be reported that brinjals are growing on a stone in the king’s courtyard they will say that the outcome is thousands of bunches and thousands of clusters.

  6. அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.
    As is the king such are his subjects.

  7. அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.
    The people follow the lead of their ruler.

  8. அரசன் வழிப்பட்டது அவனி.
    It is the earth i. e., its inhabitants that follows the king.

  9. அரசன் வழிப்படாதவன் இல்லை.
    No one is exempt from duty to the king.

  10. அரசனுக்கு ஒரு சொல் அடிமைக்குத் தலைச்சுமை.
    As regards the king it is a word, to the subject it is a burden.

  11. அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.
    The fear of the king among those in power operates auspeciously as regards the poor.

  12. அரசனுக்குத் துணை வயவாள்.
    The help of a king is his mighty sword.