This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
523
  1. வழிநடை வார்த்தை வாகனம்போல.
    Conversation on a journey is equal to a conveyance.

  2. வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.
    A straw rope is the bridle for a stray horse.

  3. வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக் காலின்மேல் போட்டுக்கொள்வானேன்?
    Why should a man meddle with a hatchet lying in the road and cut his foot?

  4. வழியே ஏறுக வழியே மீளுக.
    Go by the way, and return by the way.

  5. வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செங்கோல் என்ன செய்யும்?
    If a man go and come by the highway, what can the sceptre of the chief do to him?

  6. வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.
    Like hiring Saturn whom one met on his way.

  7. வழி வழியாய்ப் போகும்போது விதி விதியாய் வருகிறது.
    As each goes on his way, destiny accompanies him.

  8. வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.
    The horse that does not stumble is the best horse.

  9. வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
    Inveterate hatred is better than fickle friendship.

  10. வளரும் காய் பிஞ்சிலே தெரியும்.
    The future fruit may be known when it nits.

  11. வளர்த்த கடா மார்பிற் பாய்ந்ததுபோல.
    As the trained ram flew at the breast.

  12. வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறதுபோல.
    As a trained dog looks at the face.