This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
559
  1. வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.
    Even margosa oil will avail on an emergency.

  2. வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?
    Will the money obtained by the sale of margosa oil be bitter?

  3. வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய்.
    Margosa oil is not used in entertainments; it is medicinal.

  4. வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?
    Will the bitterness of margosa be removed by infusing honey into it?

  5. வேம்பும் கரும்பாச்சே வெற்றிலையும் நஞ்சாச்சே.
    The margosa has become sugar-cane, and betel has become poison.

  6. வேம்புக்குப் பல் அழகு , வேலுக்குப் பல் இறுகும்.
    When cleaned with a margosa stick the teeth look beaatiful, when cleaned with a vél stick-Acacia arabica-they are made firm.

  7. வேம்பும் சரி வேந்தனும் சரி.
    The margosa and a king are alike.

  8. வேம்பும் சரி பாம்பும் சரி.
    A margosa tree and a snake are alike.

  9. வேம்பை விரும்ப விரும்பக் கரும்பு.
    Constant use makes even margosa sweet.

  10. வேரைக் கல்வி வெந்நீர் வார்த்த கதை.
    The story of digging up a root, and pouring out hot water.

  11. வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே?
    How can a tree deprived of its roots live?

  12. வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.
    Trees endure as long as their roots are undecayed, merchants will maintain their social position if their trade continues.