This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
561
  1. வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.
    It is said that a barber who had nothing to do, got hold of a cat and shaved it.

  2. வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம்.
    The labour is excessive, the pay little.

  3. வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன், பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப்பிள்ளை ஏன்?
    What need is there of a king in a country where there is no work, or of a mongoose where there are no snakes?

  4. வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?
    Why food to him who does no work, why display to him who lives on offal?

  5. வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.
    It is said that a barber who had no work, shaved a sheep.

  6. வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?
    Why work, why child, why food to those who are destitute of energy?

  7. வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேல் சாக்கு, வெட்கம் கெட்ட நாறிக்கு அகமுடையான்மேலே சாக்கு.
    An idle woman pleads her child in excuse for her faults, a shameless woman, her husband.

  8. வேலைக்கள்ளிக்கு வேளைக்குக் காற் படி, வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப் படி.
    To a shuffling woman a quarter measure for a meal, to a worthless block half a measure.

  9. வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேலே சாக்கு.
    A lazy woman neglects her work, and lays the blame on her child.