42
பழமொழி.
-
- அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது.
- Even the grass under his footsteps will not die.
- Used when speaking of one remarkable for gentle habits.
-
- அவன் மிதித்த இடம் பற்றியெரிகின்றது.
- The place whereon he treads bursts into flames.
- Spoken of the reckless and violent.
-
- அவன் மெத்த அத்துமிஞ்சின பேச்சுக்காரன்.
- His words exceed all bounds.
- Said of one who delights in abusing others.
-
- அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான்.
- The work that was indicated by the foot he will perform by the hand.
-
- அவன் சாதி எந்தப் புத்தி குலம் எந்த ஆசாரமோ அதுதான் வரும்.
- The devices of his caste and habits of his tribe will predominate.
-
- அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.
- That which he tied with his foot cannot be loosened by the hand.
- Spoken of one of superior skill.
-
- அவன் அசையாது அணுவும் அசையாது.
- Unless he move not an atom will move.
-
- அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான்.
- Every man’s purpose will be either effectuated or frustrated by the Supreme Ruler.
-
- அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.
- He is sharpening a knife for another's throat.
-
- அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்.
- His mind is full of sores, his body is covered with blisters.