This page has been proofread, but needs to be validated.
66
பழமொழி.
  1. ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பால் இல்லை.
    Possessed of sheep by the thousand, of cattle by the thousand, he has not a spoonful of milk at home.

  2. ஆட்டுக்கு வால் அளவறுத்து வைத்திருக்கிறது.
    The tail of the sheep is proportioned to its size.

  3. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயம்பிடாரிக்கு மூன்று கொம்பு.
    Sheep and oxen have two horns, an Aiyam pidári has three.

  4. ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி?
    Can an old tiger be overcome by a sheep?

  5. ஆட்டுக்கும் மாட்டுக்குமுறையா, காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா?
    Are relationships observed among sheep and oxen? have woods and uncultivated tracts any line of demarkation?

  6. ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல.
    As the wolf entered the sheepfold.

  7. ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது.
    The fate of the lamb is that of its dam.

  8. ஆட்டுத்தலைக்கு வண்ணான் பறக்கிறதுபோல.
    As the washerman flies at the sheep's head.

  9. ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.
    The butter the sheep yields is not enough (to stew) the marrow with.

  10. ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.
    He causes them to dance and beats the drum.

  11. ஆட்டுக் குட்டிமேல் ஆயிரம் பொன்னா?
    What, thousands of gold for a young sheep?