This page has been proofread, but needs to be validated.
70
பழமொழி.
  1. ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தின்மேற் குறைசொல்லுவான்.
    The coward blames his weapon.

  2. ஆதரவற்ற வார்த்தையும் ஆணிகிடாவாத கைமரமும் பலன் செய்யாது.
    A comfortless word, and a palmira rafter without a bolt are of no use.

  3. ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடே போவானா?
    Will a chetty (a merchant,) take his departure by a river without gain?

  4. ஆதாயமில்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா?
    Will a chetty dam up a river and drain out its waters for nothing?

  5. ஆதினக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?
    Is a man possessed of landed property without a legal instrument?

  6. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
    The over-hasty is wanting in sense.

  7. ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?
    Will the over-hasty be nice about family pedigrees?

  8. ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.
    The hasty is gratified at the instant.

  9. ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.
    While his mother is in extremity, her grown up son is crying for butter-milk.

  10. ஆஸ்தியில்லாதவன் அரைமனிதன்.
    He who possesses no property is but half a man.

  11. ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
    A man of wealth is the slave of his possessions.

  12. ஆஸ்தியுள்ளவனுக்கு நாசம் இல்லை.
    The wealthy are not exposed to immediate ruin.