This page has been proofread, but needs to be validated.
74
பழமொழி.
  1. ஆயிரக்கலம் நெல்லுக்கு ஓர் அந்துப்பூச்சி போதும்.
    One grain destroying insect will consume a thousand grains of rice.

  2. ஆயிரம் காக்கைக்குள் ஒரு அன்னம் அகப்பட்டதுபோல.
    As a swan in the midst of a thousand crows.

  3. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.
    Like a single stone thrown at a thousand crows.

  4. ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.
    Can a thousand props support the universe?

  5. ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.
    A thousand bonds may equal the strength of an elephant.

  6. ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகாள்.
    Though a thousand times admonished, a faithless woman will not become a faithful wife.

  7. ஆயிரத்திலே பிறந்து ஐஞ்ஞூற்றிலே கால் நீட்டினதுபோல.
    Like one born with a thousand stretched out his legs with five-hundred.

  8. ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.
    Beauty is found only in one of a thousand.

  9. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
    The combined light of a thousand stars is not equal to a single moon.

  10. ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
    A thousand sixteenths make sixty-two and a half.

  11. ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார் துணிபொறுக்கி தொந்தோம் தொந்தோம் என்று கூத்தாடுவான்.
    He whose fortune amounts to thousands is quiet, while the rag-gatherer leaps for joy.
    Dignity is characteristic of the worthy, and levity of the worthless.