This page has been proofread, but needs to be validated.
76
பழமொழி.
  1. ஆயிரம் பனையுள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஒரு ஈர்க்கும் இல்லை.
    Although born of a father possessed of a thousand palmira trees, he has not a fibre with which to pick his teeth.

  2. ஆயிரம் பாம்பினுள் ஒரு தேரை அகப்பட்டாற்போல.
    Like a toad among a thousand serpents.

  3. ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பணத்துச் சவுக்கு.
    Half a fanam to buy a whip for a horse worth thousands of gold.

  4. ஆயிரம் நற்குணம் ஒரு லோபகுணத்தால் கெடும்.
    A single avaricious desire will destroy a thousand good qualities.

  5. ஆயிரம் பொன்பெற்ற குதிரைக்கும் சவுக்கடி வேண்டும்.
    Even a horse worth thousands of gold may require a whip.

  6. ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.
    Tell lies by the thousand and build a temple.

  7. ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.
    One of a hundred makes a skilful swords-man.

  8. ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?
    What! strike the unarmed?

  9. ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறதுபோல.
    Like seeking a weapon in the face of battle.

  10. ஆய்ச்சலாய்ச்சலாய் மழை பெய்கிறது.
    It rains in successive torrents.

  11. ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.
    An ill-considered undertaking may occasion the agony of death.

  12. ஆரக்கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.
    A female with an inauspicious mark on the neck will prove an evil in a king’s palace.