3762058Tamil Proverbs — கPeter Percival

க.

  1. கங்கையிலே முளைத்தாலும் பேய்ச்சுரை நல்லசுரை ஆமா?
    Will a wild gourd become a good gourd by growing on the Ganges?

  2. கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
    Will a crow become a swan by bathing in the Ganges?

  3. கங்கையில் ஆடினாலும், கணமும் விடாமற் செய்த பாவம் தீராது.
    Though you wash in the Ganges, sin repeated again and again will not be expiated.

  4. கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா?
    Will sin be expiated by bathing in the Ganges?

  5. கங்கையிலே படிந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.
    Though a wild gourd be dipped in the Ganges, its inferiority will remain.

  6. கங்கையிலே பிறந்த நத்தை சாலக்கிராமம் ஆகாது.
    A snail of the Ganges is not a Shalgram.
    The Shalgram is a flinty stone, containing the impression of one or more ammonitæ, supposed by the Hindus to represent Vishnu.

  7. கசக்கி மோரலாமா?
    Can the fragrance of a flower be appreciated after bruising it?

  8. கசடருக்கு இல்லைக் கற்றோர் உறவு.
    The base do not enjoy the friendship of the learned.

  9. கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
    Persons of imperfect learning have no reputation.

  10. கசடான கல்வியினும் கல்வியீனம் நலம்.
    Ignorance is better than imperfect knowledge.

  11. கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
    Wipe off the tears of him who comes weeping.

  12. கச்சற் கருவாடு மோட்சத்திற்குப் போனாலும், பிச்சைக்காரர் மோட்சத்திற்குப் போகமாட்டார்கள்.
    Though dried fish may attain final emancipation-heaven-beggars cannot.

  13. கஞ்சி வரதப்பா என்றால், எங்கே வரதப்பா என்கிறான்.
    If I say, O Varathappa give me some kanji, he replies, O Varathappa where.

  14. கடலிலே ஏற்றம் போட்ட கதை.
    The story relating to a picotta on the sea-side.

  15. கடலில் இட்ட பெருங்காயம்போல.
    Like assafœtida cast into the ocean.

  16. கடலிலே துரும்பு கிடந்தாலும் மனதிலே ஒரு சொல் கிடவாது.
    A rush may remain in the sea, but a secret will not remain in the mind.

  17. கடலில் கரைத்த புளிபோல.
    Like tamarind acid dissolved in the sea.

  18. கடலைத் தூர்த்தும் காரியம் முடிக்க வேண்டும்.
    You must accomplish your undertaking, though you may have to fill up the ocean.

  19. கடலை தூர்த்தாலும் காரியம் முடியாது.
    Though the sea be filled up, the thing cannot be effected.

  20. கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே?
    Should the sea boil, whence water to cool it?

  21. கடல்நீர் நிறைந்து ஆவது என்ன, காஞ்சிரை பழுத்து ஆவது என்ன?
    What benefit arises from the water of the ocean, what good comes from the ripening of the kànjirai, strychnos nux vomica, fruit?

  22. கடல் தாண்ட ஆசை உண்டு, கால்வாய் தாண்டக் கால் இல்லை.
    He wishes to cross the ocean, but has no feet to cross a small drain.

  23. கடல் மீனுக்கு நுளையன் இட்டதே சட்டம்.
    As regards the fish of the sea, whatever name the fisherman gives is final.

  24. கடல் வற்றிக் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
    It is said that the stork died while waiting for the ocean to dry, in the hope of getting a supply of dried fish.

  25. கடல் பெருகினால் கரையும் பெருகுமா?
    Will the shore extend when the sea flows?

  26. கடல் பெருகினால் கரை ஏது?
    What avails the shore when the sea flows?

  27. கடற் கரை தாழங்காய் கீழ் தொங்கி என்ன மேல் தொங்கி என்ன?
    What matters it whether the wild pine fruit on the sea-shore hangs high or low?

  28. கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.
    Though my debt be increased, let me have a quarter of a fanam worth more of fragrant powder.

  29. கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு.
    One fourth supply of kanji for the stomach is better than debt.

  30. கடன்காரனுக்குக் கடனும், உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்கவேண்டும்.
    One must pay one’s creditor and give to a relation the portion due to him.

  31. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும்கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
    He who borrowed to lend was ruined; and he who let go his hold of the tree he had climbed also perished.

  32. கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
    Famished though he has borrowed, an ascetic though he is wedded.

  33. கடன் வாங்கியும் பட்டினியா?
    What to famish after having borrowed money!

  34. கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுக்க வேண்டும்.
    Debt to the creditor and retaliation to the wrong-doer are due.

  35. கடன்காரனை வைக்கக் கழு உண்டா?
    Is there a stake for impaling debtors?

  36. கடன் பட்டார் நெஞ்சம் போற் கலங்கினான்.
    He was as disquieted as the mind of a debtor.

  37. கடா கடா என்றாலும் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான்.
    Though informed that it is a he-goat, he persists in asking a drop of milk for a medicinal purpose.

  38. கடா பின்வாங்குகிறது பாய்ச்சலுக்கு அடையாளம்.
    The drawing back of the he-goat shows that he is about to butt.

  39. கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழுப் போனவிடம்?
    Does the cowherd know where the ploughshare has passed?

  40. கடாவின் சந்திற் புல்லைத் தின்கிறதுபோல.
    Like eating grass screened behind 2 bull.

  41. கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல.
    As the tick was crushed to death when the goats fought.

  42. கடிகோலிலே கட்டின நாய்
    A dog tied to a stick.

  43. கடிக்க ஒரு எலும்பும் இல்லை, காதில் மினுக்க ஒரு ஓலையும் இல்லை.
    She has not even a single bone to pick, nor has she an ear-ornament to polish.

  44. கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?
    Will the cobra be affected by friendly intercourse?

  45. கடிக்கிற நாய்க்குக் கழுத்தில் குறுங் கயிறு.
    A short rope round the neck of a biting dog.

  46. கடிதான பிள்ளை பெற்றாருக்கு உதவுமா?
    Will an obdurate child prove helpful to its parents?

  47. கடிதான சொல் அடியிலும் வலிது.
    A harsh word is more painful than a blow.

  48. கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன், கடைத்தெரு வரையில் வழி விட்டானாம்.
    It is said that his uncle who would not give even a bite of an areca-nut, bore him company to the bazaar.

  49. கடித்த வாய் துடைத்தாற்போல.
    Like wiping the mouth after biting.

  50. கடித்த பாம்புக்கு பால்வார்த்தால் விஷத்தைத் தரும் அதுபோல பொல்லாதவர்க்குச் செய்யும் உபகாரம் இருக்கும்.
    When milk is placed before a biting snake, in return it gives poison, and such is the return for the favours done to the wicked.

  51. கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி.
    Bugs are all the same whether they bite or not.

  52. கடித்த நாய்க்குக் காடியைக் கொடு.
    Give vinegar to the dog that bit you.

  53. கடித்தாலும் கடிக்கட்டும். நீ கொல்லாதிரு.
    No matter if it bite you, do not kill it.

  54. கடித்த நாயைப் பயித்தியம் கொண்டது என்று சொல்வார்கள்.
    They will call that a mad dog which has bitten some one.

  55. கடிந்த சொல்லிலும் கனிந்த சொல்லே நன்மை.
    A kind word is better than a harsh one.

  56. கடியாத மூட்டையென்று விட்டு விடுவார்களா?
    Will they let a bug escape because it did not bite?

  57. கடியும் சுறுக்குத்தான் அடியும் சுறுக்குத்தான்.
    Both the bite and the stroke were quickly effected.

  58. கடுகிச்சு முடுகிச்சு வடுகச்சி கலியாணம்.
    The Vaduga woman's wedding is come nigh.

  59. கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக்கொண்டு திரிவான், பூசனிக்காய் போகிற இடம் தெரியாது.
    He walks about with a staff in a place that will admit a mustard seed, and yet he is ignorant of the place where a pumpkin might easily pass.

  60. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
    Though small, the mustard seed is not without pungency.

  61. கடுகு போன இடம் ஆராய்வார் பூசனிக்காய் போன இடம் தெரியாது.
    They search for a grain of mustard seed, but not for a missing pumpkin.

  62. கடுகு போன இடம் ஆராய்வார் மிளகு போன இடம் ஆராயார்.
    They search for a grain of mustard seed but not for a grain of pepper.

  63. கடுகுக் களவும் களவுதான் கர்ப்பூரக் களவும் களவுதான்.
    Theft is theft whether as regards a mustard seed or camphor.

  64. கடுக்காய்க்கு அகணி நஞ்சு, சுக்கிற்குப் புறணி நஞ்சு.
    The kernel of the gall-nut and the skin of ginger are poisonous.

  65. கடுங்காற்று மழை காட்டும், கடுஞ்சினேகம் பகை காட்டும்.
    Strong wind foretells rain, excessive friendship foreshows hatred.

  66. கடுஞ்சினேகம் கண்ணுக்குப் பகை.
    Excessive intimacy will prove unfriendly to one’s eyes.

  67. கடுஞ்செட்டுக் காரியக்கேடாம்.
    It is said that hard dealing fails in its object.

  68. கடுஞ்செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.
    Unfair dealing destroys the eyes.

  69. கடுஞ்சொற் கேட்டால் காதுக்கு அருவருப்பு.
    It is shocking to the ears to hear harsh words.

  70. கடுமுடுக்கடா சேவகா கம்பரிசி அடா சம்பளம்.
    Peon, my fellow, you are too strict, you have kamboo rice only as wages.

  71. கடும்பசி கல் மதில் உடைத்தும் களவுசெய்யச் சொல்லும்.
    Extreme hunger will induce a man to break through a stone wall and steal.

  72. கடை கெட்ட வாழ்வு தலை கட்ட நேரம் இல்லை.
    Labouring in menial offices she has not leisure to put up her tresses.

  73. கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்.
    Each bazaar will have its attendant.

  74. கடைசிச் சோற்றுக்கு மோரும், கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும்.
    Buttermilk for the last distribution of rice, and a mat for the foot of the bed are indispensable.

  75. கடைத்தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாற்போல.
    Like taking up a cocoanut in the bazaar and breaking it to Ganésa.

  76. கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்.
    He buys in the bazaar, and bestows at home.

  77. கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா, அபிசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?
    Will the rice in the bazaar serve for kanji, will the paramour of an adulteress be of service to her in distress?

  78. கடையில் வந்ததும் அரிசியோ நடையில் வெந்ததும் சாதமோ?
    Is that which comes to the bazaar rice? Is boiled rice cooked by the way desirable?

  79. கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.
    Although rotten pumpkins are tied up in the bazaar, they are still rotten.

  80. கட்டப்பாரையை விழுங்கிச் சுக்குக் கஷாயம் குடித்ததுபோல.
    Like drinking a decoction of dry ginger after swallowing a crowbar.

  81. கட்டாந்தரை அட்டைபோல.
    Like a wood-louse on dry ground.

  82. கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வருவான்.
    When told to tie and bring, he cuts and brings.

  83. கட்டி அழுகிறபோது கையும் துழாவுகிறதே.
    When she embraces and weeps, her hand is groping to steal.

  84. கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.
    She brings forth her child where she sees a bedstead, and takes the prescribed tonic where she sees dry ginger.

  85. கட்டி வழி விட்டால் வெட்டி அரசு ஆளலாம்.
    If he organize an army and lead it, he may cut down the enemy and reign as a king.

  86. கட்டி அழுகையிலே என் மகளே உனக்குப் பெட்டியிலே கை என்ன?
    My daughter, why is your hand in the basket while you embrace and weep?

  87. கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?
    It makes no difference whether you flog one bound or unbound.

  88. கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லுவார் பலர்.
    Many will find fault with a house newly built.

  89. கட்டின வீட்டுக்குக் கருத்துச் சொல்லுவார் பலர்.
    Many will express an opinion respecting a house just built.

  90. கட்டினவனுக்கு ஒரு வீடானால், கட்டாதவனுக்குப் பல வீடு.
    He who has built a house has only one, whereas he who has not built makes use of many.

  91. கட்டிவைத்த பூனையை அவிழ்த்து விட்டு வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?
    On untying a cat and calling puss, puss, will it come?

  92. கட்டிலைத் திருப்பிப்போட்டால் தலைவலி போமா?
    Will head-ache go by turning the bedstead?

  93. கட்டிவைத்த பணத்தைத் தட்டி பறித்தாற்போல.
    As if one displaced and carried away money carefully tied up.

  94. கட்டி விதை வெட்டி விதை.
    Provide seed-corn, and sow having tilled the ground.

  95. கட்டு அறிந்த நாயும் அல்ல, கனம் அறிந்த கப்பரையும் அல்ல.
    He is not a dog accustomed to restraint, nor a mendicant’s dish that knows what self-respect is.

  96. கட்டுக்குக் கட்டு மாறிக் கட்டவேண்டும்.
    Every time you have to tie, you must tie it in a different way.

  97. கட்டுப்பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப் படவேண்டும், குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
    When bound, it should be by the hair of the roe, and if cuffed, it should be by a hand ornamented with jewels.

  98. கட்டுச்சோற்று மூட்டையும் இளம் பிள்ளையும் எடுப்பது வருத்தம்.
    It is difficult to carry, besides a child, boiled rice tied up for a journey.

  99. கட்டைக்குப் போகும்போது காலாழி பீலியா?
    Are toe-rings necessary when a woman goes out to g the firewood?

  100. கட்டோடே போனால் கனத்தோட வரலாம்.
    If one sets out auspiciously, he may return with honour.

  101. கணக்கதிகாரத்தைப் பிறக்கும் கோடாவி.
    He is an axe splitting the tree of arithmetic.

  102. கணக்கன் கணக்கு அறிவான், தன் கணக்கைத் தான் அறியான்.
    The accountant is clever at numbers, but he is ignorant of his own accounts.

  103. கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து.
    Bore through the eyes of a young kurnum and a young crow wherever you find them.

  104. கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
    When accounts are examined, difficulties arise.

  105. கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு.
    To suffer hunger is natural to an accountant.

  106. கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது.
    There will be constant disputes in a house should one of its inmates be a skilful accountant.

  107. கணக்கன் வீட்டுக் கலியாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.
    A marriage ceremony in the house of an accountant is a waste of oil.

  108. கணக்கப்பிள்ளை எல்லாம் எழுத்துப்பிள்ளை அல்ல.
    All accountants are not learned.

  109. கணபதி பூசை கை மேலே பயன்.
    The pooja of Ganèsa has immediate effect.

  110. கணவனைப் பிரிந்தும் அயல் வீட்டில் இருக்கிறதா?
    What! in a neighbour's house, separated from your husband?

  111. கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்.
    If her ankle grow big, she will be deprived of her husband.

  112. கண் கண்டது கை செய்யும்.
    What the eye has seen the hand may do.

  113. கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.
    I was waiting like an eye-snake.

  114. கண் குருட்டுக்கு மருந்து இட்டால் தெளியுமா?
    Is blindness curable by an external application?

  115. கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையா?
    Though blind, does he sleep the less?

  116. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?
    What benefit can you expect from the worship of the sun if you have lost your eyesight?

  117. கண் பாவனையாய்க் கொண்டை முடிக்கிறது.
    Tying one’s lock of hair in imitation of others’.

  118. கண்ட கண்ட கோயில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்.
    I worshipped with raised hands in every temple I visited.

  119. கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை.
    That which was seen was a snake, that which bit was the stone of a mango fruit.

  120. கண்டது காட்சி பெற்றுது பேறு.
    Whatever is seen is a sight, whatever is received is a gift.

  121. கண்டதைக் கேளாவிட்டால் உண்டு உறங்க மாட்டான்.
    He will neither eat nor sleep without asking whatever he sees.

  122. கண்டதைக் கேளாவிட்டால் கொண்டவன் அடிப்பான்.
    If she does not attend to the affairs of her family, her husband will beat her.

  123. கண்டறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம்.
    It is said that if an inexperienced man marries, he will wander about dragging his wife, through jungles and over hills.

  124. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.
    By learning what he sees, a person becomes a pundit.

  125. கண்டது கேட்டது சொல்லாதே காட்டுமரத்திலே நில்லாதே.
    Never utter what you have seen and heard, nor stand under a wild tree.

  126. கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை.
    That which he saw was a snake, but he was bit by the rough points of the palmyra stem.

  127. கண்டதைக் கற்றுக்கொண்டு கரையேறு
    Acquire what you can, and go ashore.

  128. கண்டவன் எடானா?
    Will he who finds, not take up?

  129. கண்டால் தெரியாதா கம்பளியாட்டு மயிர்?
    May not sheep-hair be known as soon as seen?

  130. கண்டால் முறை சொல்லுகிறது காணாவிட்டால் பெயர் சொல்லுகிறதா?
    If present, do you call mentioning the relationship of the party, and when absent, his name only?

  131. கண்டால் ஆயம் காணா விட்டால் மாயம்.
    If seen, duty, if not seen, fraud.

  132. கண்டு செத்த பிணம் ஆனால் சுடு காட்டிற்கு வழி தெரியும்.
    If one die under human observation, his corpse will find its way to the place of cremation.

  133. கண்டு பேசக் காரியம் இருக்கிறது முகத்தில் விழக்க வெட்கமாய் இருக்கிறது.
    I have something to speak of in person, but I am ashamed to look at his face.

  134. கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லையென்று இருக்க வேண்டும்.
    Behave as though seeing, you see not, and hearing, you hear not.

  135. கண்டு எடுத்தவன் கொடுப்பானா?
    Will he who finds and takes a thing give it up?

  136. கண்ணால் கண்டதற்குச் சாட்சியும் வேண்டுமா?
    Is a witness needed to prove that which one has seen with his own eye?

  137. கண்ணாற் கண்டது பொய் அகப்பைக்குறி மெய்
    That which one has seen is false, the sign of agappai is true.

  138. கண்ணாற் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி?
    Why the sign of an agappai in proof of that which one has seen?

  139. கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு.
    That one has not seen with his own eye amounts to one third.

  140. கண்ணாலே சீவன் கடகட என்று போனாலும் வண்ணான் கழுதை சுமந்தே தீரவேண்டும்.
    The ass of a washerman must carry the pack through, though its life may depart with a rattling noise through the eyes.

  141. கண்ணான பேர்களை மண்ணாக்குகிறான்.
    He treats as common earth those who are precious as the eyes.

  142. கண்ணான மனதைப் புண்ணாக்குகிறான்.
    He wounds the heart which is as tender as the eye.

  143. கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு.
    Though the life of the washerman is forced through his eyes by reason of drought, rain to him would be poison.

  144. கண்ணாடி நிழலிற் கண்ட பணம் கடனுக்கு உதவுமா?
    Will the money reflected in a mirror avail for the payment of debt?

  145. கண்ணான பேர்களைப் புண்ணாக்கினாய்.
    You have wounded your dearest friends.

  146. கண்ணிமை கைநொடி அளவே மாத்திரை.
    The twinkling of the eye, or the snapping of the fingers, is the measure of a moment of time.

  147. கண்ணியில் அகப்பட்ட மான்போல் கலங்குகிறான்.
    He is dismayed like a deer caught in a snare.

  148. கண்ணியில் அகப்பட்ட கரிக்குருவிபோல் கலங்குகிறான்.
    He is agitated as an ensnared blackbird.

  149. கண்ணிற் பட்டாற் கரிக்குமா, புருவத்திற் பட்டாற் கரிக்குமா ?
    When will it give pain, when it hits the eye or the eye-brow?

  150. கண்ணினால் எண்ணுவான்.
    He can count with his eyes—at sight.

  151. கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்க்கல் ஆகாது.
    When the eyes become sore, one cannot see them reflected in a mirror.

  152. கண்ணின்முன்னே ஒன்று சொல்லிக் காணாத இடத்திலே இரண்டு சொல்லுகிறது.
    To assert a thing when in sight and to contradict it when out of sight.

  153. கண்ணிலே எண்ணெய் பட்டாற் கரிக்குமோ பிடரியில் பட்டால் கரிக்குமோ ?
    Will oil give pain when it falls into the eye, or on the back of the neck?

  154. கண்ணிற் பட்ட கையைத் தறிப்பார் இல்லை.
    No one cuts off the hand because it has struck the eye.

  155. கண்ணிலே பட்டால் விரலைத் தறிக்கிறதா ?
    Should it strike the eye is the finger to be cut off.

  156. கண்ணிலே வருகிறது புருவத்திலே.
    The eye brow has received that which threatened the eye.

  157. கண்ணில் கண்டது கோடி காணாதது அனந்தம் கோடி.
    That which was seen was a crore, and that not seen many crores.

  158. கண் உள்ளபோதே காட்சி.
    One has the pleasure of seeing as long as the eyes are unimpaired.

  159. கண் ஊனன் கைப்பொருள் இழப்பான்.
    The blind will lose his wealth.

  160. கண்ணுக்குப் புருவம் காதாமா ?
    Is the brow ten miles in advance of the eye?

  161. கண்ணுக்குப் புண்ணும் அல்ல, காண்பார்க்கு நோயும் அல்ல.
    It is neither an eye-sore, nor painful to beholders.

  162. கண்ணும் கருத்தும் உள்ளபோதே காணோம் அதன் பின்பு என்ன கிடைக்கும் ?
    We do not realize it when the eye and mind are unimpaired; what may we expect to gain afterwards?

  163. கண்ணுக்கு இமை காதாமா ?
    Is the eye-lid far apart from the eye?

  164. கண்ணுக்குட் சம்மணம் கொட்டுவாள் கம்பத்தில் ஐந்தானை கட்டுவாள்.
    She will sit in one's eye cross-legged, and tether five elephants to the pole of a dancer.

  165. கண்ணை இமை காத்ததுபோல்.
    As the eye-lash preserved the eye.

  166. கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது.
    The deity that deprived him of sight gave him superior mental endowments.

  167. கண்ணைக் கொண்டு நடந்ததுபோல உன்னைக் கொண்டு நடந்தேன்.
    I guarded you as I did my own eyes.

  168. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல.
    As one was left in the jungle blindfolded.

  169. கண்ணைக் காட்டி அழைத்தால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா ?
    Will she who would not come when called by the expression of your eyes, obey when taken by the hand?

  170. கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.
    The deity that destroyed the eyes gave a supporting staff.

  171. கண்ணைமூடிக் குட்டுகிறதா?
    Is it to strike the head after covering the eyes?

  172. கண்ணோ புண்ணோ.
    Is it an eye, or a sore?

  173. கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழமாட்டார்கள்.
    They who walk with their eyes open will not fall into the pit.

  174. கண்தெரிந்து வழி நடக்கும்படி நினை.
    Take care that you walk with your eyes open.

  175. கண் பார்த்தால் கை செய்யும்.
    If the eye have seen it, the hand may perform it.

  176. கதவைச் சாத்தினால் நிலை புறம்பு.
    When the door is shut, the door-frame is outside.

  177. கதிரவன் சிலரைக் காயேன் என்குமா ?
    Will the sun say, I will not burn certain persons?

  178. கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு.
    Weed the corn even at the risk of destroying the ears.

  179. கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது.
    Though the thread on the spindle diminishes, that on the neck of a kalla woman does not.

  180. கதைக்குக் காலும் இல்லை தலையும் இல்லை.
    Mere rumours have neither head nor foot.

  181. கதைக்குக் கால் இல்லை பேய்க்குப் பாதம் இல்லை.
    Rumours have no legs, nor have demons feet.

  182. கதையோ பிராமணா கந்தையோ பொத்துகிறாய், அல்லடீ பேய் முண்டாய் சீலைப்பேன் குத்துகிறேன்.
    O brahman, do you repeat a story or mend old clothes? No, you foolish widow, I crush the lice in my clothes.

  183. கத்தாிக்காய் சொத்தை என்றால் அாிவாள் மணைக் குற்றம் என்கிறாள்.
    When it is said that the brinjal is worm eaten, she imputes it to a defect in the knife.

  184. கத்தரிக்காயிலே காலும் கையும் முளைத்தாற்போல.
    As if feet and hands shot forth in the brinjal.

  185. கத்தரிக்காய் விரை சுரைக்காய் காய்க்காது.
    The seed of a brinjal will not produce gourds.

  186. கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுறா?
    When you buy a brinjal, will the bazaar people give you a pumpkin in at the bargain?

  187. கத்தியும் கடாவும் போலே.
    Like a knife and a he-goat.

  188. கத்தியைப் பார்க்கிலும் கன கோபம் கொலை செய்யும்.
    Great anger is more destructive than the sword.

  189. கத்திகட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்சாதி.
    The wife of a swordsman is at any moment liable to becomes widow.

  190. கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?
    Is the elk to be carried to the knife?

  191. கத்துமட்டும் கத்திப்போட்டுக் கதவைச் சாத்திவிட்டுப் போ
    Bawl out as long as you like, and shut the door when you go.

  192. கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது சொல்லு சொல்லு என்றால் புலவனும் சொல்லான்
    When repeatedly urged to bray, even an ass will not do so, when asked to sing, even a poet will refuse.

  193. கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?
    Does the perfumer appreciate the distinction of scents?

  194. கந்தைக்குத் தக்க பொந்தை.
    The hole is in proportion to the rag.

  195. கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.
    The more it is stitched and the stronger does the rag become.

  196. கந்தை ஆனாலும் கசக்கி உடு, கூழ் ஆனாலும் குளித்துக் குடி.
    Though only a rag; wash it and put it on, and if but kanji, drink it after ablution.

  197. கபட இன் சொல்லினும் கடிய சொல்லே நலம்.
    Better is a harsh word than one smooth and feigned.

  198. கபாலக் குத்து கண்ணைச் சுழித்தது.
    Severe head-ache caused the eyes to sink.

  199. கப்பலிலே பாதிப்பாக்குப் போட்டதுபோலே.
    Like dropping a bit of areca-nut in a ship.

  200. கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுக் தீர்க்கவேண்டும்.
    Debt incurred by the sea-faring merchant must be discharged by spinning cotton.

  201. கப்பல் ஓடிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமோ?
    Can a debt incurred on account of a sea-faring life be discharged by spinning?

  202. கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
    The ship owner's wife is in good condition as long as the ship is safe, but if that be lost she is a beggar.

  203. கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
    The prosperity of the ship-owner is at the mercy of the wind.

  204. கமரிற் கவிழ்ந்த பால் அமரர்க்கு இட்ட அன்னம்.
    Milk poured into a crevice, rice offered to enemies.

  205. கம்பப் பிச்சையோ கடைப் பிச்சையோ?
    Are not alms obtained by pole-dancing the lowest species of alms?

  206. கம்பளியிலே ஏற்றசோற்றை மயிர் மயிர் என்கிறதா?
    Is it to say that the boiled rice received in a cumbly is full of hair?

  207. கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்து இருக்கிறதா?
    Does hair grow in the money for which cumblies have been sold?

  208. கம்பளியில் ஒட்டின கூழைப்போல.
    Like food sticking to a cumbly.

  209. கம்பளிமேல் பிசின்.
    Gum on a cumbly.

  210. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.
    Even the peg to which a cow is tied at Kamban’s house will sing.

  211. கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.
    Arrange it so that when he goes to weed the rye, he may also engage a wife for his younger brother.

  212. கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ளவேண்டும்.
    One must buy a smith’s cow after cropping her ears.

  213. கம்மாளன் வீட்டில் பிள்ளை பிறந்தால் தேவடியாள் தெருவில் சர்க்கரை வழங்க வேண்டும்.
    When a child is born in a smith’s family, sugar must be dealt out in the street of the dancing girls.

  214. கம்மாளன் நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா?
    Will the smith’s dog be alarmed at the sound of a hammer?

  215. கயிறு இல்லா பம்பரம்போல.
    Like a top without a string.

  216. கயிற்றைப் பாம்பென்று எண்ணிக் கலங்குகிறது.
    Trembling at a bit of rope thinking it to be a snake.

  217. கரகத்து நீர் காதங் காக்கும்.
    Water in a hand-pot will avail for a katham.

  218. கரடி பிறை கண்டது போல.
    As a bear saw the new moon.

  219. கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது.
    Though one be pursued by a bear, he may not escape through weavers’ street.

  220. கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டாற் பயம்.
    He who has been kicked by a bear, fears the sight of one who sells cumblies.

  221. கரடி புற்றிலே வாய் வைத்தாற் போல், கருடன் காலிற் சதங்கை கட்டியதுபோல்.
    As the bear puts its nose into the anthill, as small bells were tied to the legs of a kite.

  222. கரணம் தப்பினால் மரணம்.
    To fail in a somersault may be fatal.

  223. கரம்மாறிக் கட்டினால் கனம் குறையாது.
    Excessive cording will not diminish the weight of a package.

  224. கரிப்புக்கு இருந்து பிழை, கலகத்துக்கு ஓடிப் பிழை.
    In famine, save your life where you are, in war, by flight.

  225. கரிப்பிலே பிள்ளை விற்றாற்போலே.
    Like selling a child in famine.

  226. கரு இல்லாத வித்தையும் குரு இல்லா சீஷனும்போல்.
    Like an art without ingenuity to comprehend it, and a disciple without a teacher.

  227. கருக்கி உருக்கி நெய்வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.
    Though you give him fried meat and pour melted ghee on his rice, he will say nothing but what he saw.

  228. கருங்கண்ணி பட்டால் கரையான் கண்ணாலும் திரும்பிப் பாரான்.
    When the karunkanni fish is caught, the fisherman does not even turn to look at it.

  229. கருங்கல்லிலே நார் உரிப்பான்.
    He will strip fibre from a piece of granite.

  230. கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினதுபோல.
    As a silver ferrule fastened to an ebony pestle.

  231. கருங்காலிக் கட்டைக்கு வாய் நாணாக் கோடாலி இன வாழைத் தண்டுக்கு வாய் நாணுமா?
    Will an axe whose edge is not blunted by cutting a piece of ebony, be made dull by cutting a stem of a plantian tree?

  232. கருடன் காலில் கெச்சை கட்டினதுபோல.
    As a string of small bells was tied to the leg of a kite.

  233. கருடனைக் கண்ட பாம்புபோல.
    Like a snake in sight of a kite.

  234. கருப்பங்கட்டியிலும் கல்லு இருக்கும்.
    Stones may be found even in sugar candy.

  235. கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு.
    Consistency of action is the measure of greatness.

  236. கருமத்தை முடிக்கிறவன் அருமை ஒன்றும் பாரான்.
    A resolute man cares nothing about difficulties.

  237. கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி.
    A blacksmith’s shop, and the place in which asses roll themselves are alike.

  238. கரும்பிலும் தேன் இருக்கும் கள்ளியிலும் பால் இருக்கும்.
    There is honey in sugarcane, there is sap in milk-hedge.

  239. கரும்புக்கட்டிக்கு எறும்பு தானே வரும்.
    Ants will of course be attracted by a lump of sugar-candy.

  240. கரும்பு முறித்து கழுதையை அடித்த கதை.
    The story of one striking an ass with a sugar-cane.

  241. கரும்பைக் கழுதைக்குமுன் போட்டால் கழுதைக்கு தெரியுமோ கரும்பு ருசி.
    Does the ass enjoy the flavor of the sugar-cane that is placed before it?

  242. கரும்பு தின்னக் கூலியா?
    What, a reward for eating sugar-cane?

  243. கரும்பும் வேம்பு ஆயிற்றே.
    Even sugar cane has become a margosa tree.

  244. கரும்புக்கு உழுத புழுதி காய்ச்சிய பாலுக்குச் சருக்கரை ஆமா?
    Will earth pulverised by the plough for sugar-cane, answer for sugar to be mixed with boiled milk?

  245. கரும்பு கசக்கிறது வாய்க்குற்றம்.
    If sugar-cane prove bitter to the palate, it is the fault of the mouth.

  246. கரும்பு ருசியென்று வேரோடு பிடுங்கலாமா?
    May sugar-cane be plucked up by the root because it is of fine flavor?

  247. கரும்பை விரும்ப, அது வேம்பு ஆயிற்று.
    If taken to excess sugar-cane becomes bitter as margosa.

  248. கரும்பு கட்டோடே இருக்க எறும்பு தானே வரும்.
    Where bundles of sugar-cane are, there ants will come of themselves.

  249. கருவு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும்.
    An egg without yolk, an art without a teacher.

  250. கருவேலமரத்திற்கு நிழல் இல்லை, கன்னானுக்கு முறை இல்லை.
    The karuvél Acasia casts no shade, smiths observe no relationship in marrying.

  251. கரை காணாத தோணிபோல.
    As a doney out of sight of land.
    The common name of a country vessel, some of which are of considerable size. They have no deck and are thatched with palm leaves.

  252. கரை தட்டி கப்பல்போல.
    Like a stranded vessel.

  253. கரைப்பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல.
    Like the misery endured by him who embarked when there was a way by land, and by the husband who revealed to his wife that which he ought not.

  254. கரைப்பார் கரைத்தாற் கல்லும் கரையும்.
    Under the management of the skilful, even a stone may be dissolved.

  255. கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவானாம்.
    It is said that he who does not exaggerate when a tumult occurs will go to hell.

  256. கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா?
    In regard to a bed is the distinction of head and foot observed in a battle-field?

  257. கலகம் கலந்தால் உலகம் கலங்கும்.
    In a general insurrection universal consternation prevails.

  258. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
    Popular agitation leads to justice.

  259. கலகமே மெய்யானாற் புளுகாதவன் பாவம் .
    If an insurrection exists, it is wrong not to make it known.

  260. கலக்கந்தைக் கட்டிக் காணப் போனால் இருக்கலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்.
    When I went in rags to see her, she appeared enveloped in double the quantity.

  261. கலக் கம்பு தின்றாலும் காடை காட்டிலே.
    Though it may consume a kalam of gtain, the quail lives in the jungle.

  262. கலக்கினும் கடல் சேறாகாது.
    Though never so troubled, the sea does not become muddy.

  263. கலத்திலே சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல.
    Like holding the hand after putting rice on the plate.

  264. கலக் நெல்லுக்குக் கல உமி இருக்குமா?
    Will a kalam of paddy yield a kalam of husks?

  265. கலப் பணத்தைப் பார்க்கிலும் ஒரு கிழப் பிணம் நல்லது.
    The corpse of an old person is better than immense wealth.

  266. கலப் பால் கறக்கலாம் துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா?
    A kalam of milk may be drawn; can a drop be infused into the teat?

  267. கலப் பாலுக்குத் துளிப் புரை.
    A drop of butter-milk or curds to a kalam of milk.

  268. கலப்பானாலும் பூசபூசப் பொன்னிறம்.
    Though not pure, repeated gilding will give it the colour of gold.

  269. கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போலே
    Like putting a drop of poison in a kalam of milk.

  270. கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?
    Will not a cat that has drunk a kalam of milk drink an álak?

  271. கல மா இடித்தவள் பாவியும், கப்பி இடித்தவள் புண்ணியவதியுமா?
    Is she who pounded a kalam of flour vicious, and she who pounded rolong virtuous?

  272. கலம் கலந்தால் குலம் கலக்கும்.
    When plates are interchanged, tribal marriages interchange.

  273. கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது.
    Though a kalam of chaff be pounded, it will not become rice.

  274. கல உமி தின்றால் ஒரு அரிசி தட்டாதா?
    If a kalam of chaff be eaten may hot a grain of rice turn up?

  275. கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தானாம்.
    It is said that he forgot to tie the táli owing to the bustle at the wedding.

  276. கலியாணத்திலும் பஞ்சம் இல்லை, களத்திலும் பஞ்சம் இல்லை.
    No scarcity at a wedding, nor in the threshing floor.

  277. கலியாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?
    Will the woman who wept as she clung to the post of a marriage pandal at be silent when she attends a funeral?

  278. கலியாண வீட்டிற்குப் போய் அறியான், மேளச் சத்தமும் கேட்டும் அறியான்.
    He has never been at a wedding, nor has he heard the sound of a tom-tom.

  279. கலியாணம் செய்தும் சன்னியாசியா?
    What, though married yet a Sanyási-ascetic?

  280. கல் ஆகிலும் கணவன், புல் ஆகிலும் புருஷன்.
    Though in heart hard as a stone, and worthless as a blade of grass, he is your husband.

  281. கல் எறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்பக்கூடாது.
    Though one may escape the cast of a stone, he cannot escape the glance of an evil eye.
    The evil eye கண்ணூறு and the evil tongue நாவூறு are feared very generally. To avert their influence as regards fruits &c, in a garden, it is common to put up some object of attraction as a water-pot whitewashed, inverted on a stump, and dotted with black spots &c. In some enclosures grotesque images are seen.

  282. கல்லடிச்சித்தன் போகிற வழி, காடு மேடு எல்லாம் தவிடு பொடி.
    All the rough and rugged ground before the stone-cutter will be reduced to powder.

  283. கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.
    Do not contend with him who has studied kalladam.
    Kalladam a work on the third part of grammar is said to be extremely dry.

  284. கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
    The poverty of the learned is better than the wealth of the unlearned.

  285. கல்லாத ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே.
    The illiterate who boast of high rank may be compared to the dust mixed with paddy-unhusked rice.

  286. கல்லார் உறவிலும் கற்றோர் பகை நலம்.
    The enmity of the learned is better than the friendship of the illiterate.

  287. கல்லார் உறவகல் காமக் கடல் கட.
    Keep at a distance from the unlettered; cross the sea of passion.

  288. கல்லிலும் வன்மை கனமூடர் நெஞ்சம்.
    The heart of a great fool is harder than a stone.

  289. கல்லிலே நார் உரிக்கிறது போல.
    Like stripping fibre from a stone.

  290. கல்லும் தேங்காயும்போலப் பேசுகிறான்
    He speaks as effectively as the hitting of a stone on a cocoanut.

  291. கல்லும் காவேரியும் உள்ளமட்டும் வாழ்க.
    May you live as long as the rocks and the Cauveri exist.
    The river Cauveri rises in the western ghauts and flows into the bay of Bengal. It is the source of the great fertility of Tanjore and the adjacent districts. According to the legend it originated in the following manner. In ancient times when the people of southern India suffered from drought, Ganésa became incarnate in the form of a crow. As such he visited the abode of an ascetic on one of the western hills. He there alighted on the waterpot of a hermit and upset it. The water thus spilt, by reason of the hermit’s merit, became a river: the current spelling would make the name the lake of the crow: the legend requires the word to be spelt காவேரி crow mounting, whereas காவேரி lake of the crow is common.

  292. கல்லு வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூடவேண்டும்.
    On seeing the rapid approach of a stone press your teeth and shut your mouth.

  293. கல்லை ஆகிலும் கரைக்கலாம், மூர்க்கன் மனதைக் கரைக்கல் ஆகாது.
    Even stones may be dissolved, but the mind of a fool cannot.

  294. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் .
    On finding a stone we see no dog, on seeing a dog we find no stone.

  295. கல்லைக் குத்துவானேன் கை நோகிறது என்று அழுவானேன்?
    Why beat a stone and then weep, exclaiming it has pained my hand?

  296. கல்லைப்போலக் கணவன் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்?
    Why weep for kanji while you have a husband as hard as a stone?

  297. கல்லைக் கிள்ளி கை இழந்தது போலாம்.
    Like losing the hand by pinching a stone.

  298. கல்வி இல்லான் செல்வம் கற்பில்லாள் அழகு.
    Wealth without learning is like beauty without chastity.

  299. கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழைவேண்டும்.
    Plants of learning flourish in the rain of tears.

  300. கல்வியும் குலமும் வெல்வது வினவில்.
    When inquiring what will prevail, one’s learning and rank naturally occur.

  301. கல்வி உள்ள இளைஞன் கன கிழவன்.
    A well instructed youth is an old man.

  302. கல்வியைப் பங்கு போட ஏலாது.
    Learning cannot be allotted in portions-to persons:

  303. கவணெறி நெறியில் நில்லாதே,கண்டவன் தலையை உடைக்கும்.
    Do not stand in the way of a stone from a sling, it may break the head of the beholder.

  304. கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவிகொள்ளார்க்கு அவகீர்த்தி.
    Praise to those who approve of a poem, and blame to those who will not listen to it.

  305. கவிக்கொண்டார்க்கும் கீர்த்தி கலைப்பார்க்கும் கீர்த்தியா?
    Are those who accept a poem and those who reject it alike praiseworthy?

  306. கவிந்திராணம் கஜேந்திராணம் ராஜாவே நிற்பயே வகி.
    O king, manage a poet laureate and a superior elephant without fear.

  307. கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.
    To effect your object, if necessary, cling to the legs of an ass.

  308. கழுதையைக் காணவேண்டினால் குட்டிச் சுவரிலே காணலாம்.
    If an ass be wanted, it may be found feeding near a ruinous wall.

  309. கழுதைக் கெட்டால் குட்டிச்சுவர்.
    If an ass be out of condition, it will be as useless as a ruinous wall.

  310. கழுதைக்கு ஏன் கடிவாளம்?
    Why a bridle for an ass?

  311. கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து.
    Dust is medicine for the sores of an ass.

  312. கழுதையும் குதிரையும் சரி ஆமா?
    Are an ass and a horse equal?

  313. கழுதையும் குதிரையும் பிணைத்தாற்போல .
    Like yoking an ass and a horse together.

  314. கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?
    Can an ass appreciate fragrant powder?

  315. கழுதைக்குச் சேணம் கட்டினாலும் குதிரை ஆமா?
    Does an ass become a horse by being saddled?

  316. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று.
    The ass by wearing away has become an ant.

  317. கழுதைக்கு ஏன் கவினம், அல்லது கடிவாளம்?
    Why a bit or a bridle for an ass?

  318. கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல.
    Like tying an ass and feeding a sacrificial fire.
    This proverb relates to the following story. A certain Maharàja had a barber who had evinced great skill in shaving hie royal master when he was asleep. To reward him the King resolved to elevate him in the social scale. The brahmans were called and ordered to make a brahman of the barber. They set to work, kindled a sacred fire and the barber was led round it, whilst the priests uttered the required incantations for accomplishing their purpose.
    The prime minister being of a somewhat facetious temperament determined to metamorphose an ass. As the proverb intimates he kindled a fire and led the animal round it. When the King saw him thus engaged he asked him what he was doing. The prime minister replied by stating that if the brahmans could make a brahman of a barber he thought an ass might be made into a horse, and he was therefore engaged in the ceremony.

  319. கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை .
    Though religious instruction be whispered in the ears of an ass nothing will come of it but the accustomed braying.

  320. கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?
    Having married an ass, do you fear his kicking?

  321. கழுதை மேல் ஏறி என்ன, இறங்கி என்ன?
    What matters it whether you mount an ass, or alight from one?

  322. }கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை, இறங்கியும் சிறுமை இல்லை.
    Though you may ride on an ass, you gain no honour, nor are you disgraced by dismounting.

  323. கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?
    Did the washerman become a farmer by ploughing with an ass?

  324. கழுதை உழுது குறவன் குடி ஆனானா?
    Has the forester become a farmer by ploughing with an ass?

  325. கழுதை மயிர் பிடுங்கினால் இலாபம் என்ன நஷ்டம் என்ன?
    What profit or loss will arise from plucking off the hair of an ass?

  326. கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்வானா?
    Can one reign as a king by selling ass-hair?

  327. கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி வாசனை?
    Does an ass appreciate the odour of musk?

  328. கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்
    The foreign country of an ass is a ruinous wall.

  329. கழுதை தப்பினால் குட்டிச்சுவரிடத்தில் இருக்கும்
    If an ass goes astray, it may be found near a ruinous wall.

  330. கழுதைப்பொதியில் ஐங்கல மாறாட்டமா?
    Are there five kalams of fraud in the pack on an ass?

  331. கழுதை விட்டை ஆனாலும் கை நிரம்ப வேண்டும் என்கிறாய்.
    You say get a handful, although it be but ass dung.

  332. கழுத்திலே கரிமணி இல்லை பெயர் முத்துமாலை.
    Her name is pearl necklace, yet on her neck she has not a black bead.

  333. கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?
    What! is it to tread in the mud every time you wash your feet?

  334. கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.
    A kómutti exactly fitted to the stake.

  335. களம் சாறுகிறவளை மிரட்டுவானாம் போர் பிடுங்குகிறவன்.
    It is said that he who steals grain from the stack, will frighten away the women who may sweep the threshing floor.

  336. களையக் கூடாததைக் கண்டால் அடி பெயர்ந்து அப்புறம் போ.
    If you cannot pluck up, pass by on the other side.

  337. களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக்கொள்.
    Do not fret yourself about that which cannot be avoided.

  338. கல் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
    It is better to gain a quarter of a fanam by selling camphor than a kalam by selling toddy.

  339. கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.
    He plays the thief and also holds the lamp.

  340. கள்ள விசுவாசம் கழுத்தெல்லாம் செபமாலை.
    The neck of the hypocrite is covered with rosaries.

  341. கள்ளனையும் வெள்ள அணையும் கட்டிவிடு.
    Secure a thief by tying, and a flood by damming it up.

  342. கள்ளப் பிள்ளையிலும் செல்லப்பிள்ளை உண்டா?
    Are there any indulged ones among the children of kallars?

  343. கள்ளனை ஆரு நள்ளார் என்றும்.
    No one will ever approve of a thief.

  344. கள்ளனுக்கு ஊரெல்லாம் விள்ளாப் பகை.
    The whole country owes implacable hatred to a thief.

  345. கள்ள மாடு சந்தை ஏறாது.
    A vicious bullock will not be brought to market.

  346. கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.
    A rogue may be trusted, but not a dwarf.

  347. கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின்போகப்படாது.
    One may follow a rogue without risk, but not a dwarf.

  348. கள்ளன் அச்சம் காடு கொள்ளாது.
    The jungle is not large enough to contain the fear of rubbers.

  349. கள்ள மாடு துள்ளும்.
    An unwilling bullock is restless.

  350. கள்ள மனம் துள்ளும்.
    A guilty mind is agitated.

  351. கள்ளன் உறவு உறவும் அல்ல, காசா விறகு விறகும் அல்ல.
    The friendship of a rogue is not friendship, nor is kásáwood fuel.

  352. கள்ளன் புத்தி திருட்டுமேலே
    The mind of a rogue is set on thieving.

  353. கள்ளன் பிள்ளைக்கும் கள்ளப் புத்தி.
    Even the child of a thief is characterized by thievish propensites.

  354. கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்.
    The wife of a thief is at any moment liable to become a widow.

  355. கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் காணும் குறி கேட்கலாமா?
    Can the wife of a thief be consulted as an augur for the recovery of stolen property?

  356. கள்ளனும் வெள்ளமும் ஒன்று.
    A thief and a flood are alike.

  357. கள்ளனுக்குப் பாதி வெள்ளனுக்குப் பாதி.
    One half to the rogue, and one half to the honest.

  358. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று.
    A gardener is another term for a thief.

  359. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியுமட்டும் திருடலாம்.
    If the thief and a gardener are united, one may steal till day-break.

  360. கள்ளன் கொண்ட மாடு எத்துறை போயென்ன?
    What matters it to what ferry the bull may go that has been bought by a thief?

  361. கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை.
    He who points out a thief is hated by him.

  362. கள்ளி பெருத்து என்ன? காய் உண்டா நிழல் உண்டா?
    What if the kalli grow large? Has it any fruit or any shade?

  363. கள்ளிக்கு நாடு எல்லாம் காடு.
    The whole country is a wild fit for the growth of the kalli.

  364. கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினதுபோல.
    Like attaching a silver ferrule to a kalli stick.

  365. கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை.
    Why you hypocrite, inlay with gems? that which is in the ear is made of brass.

  366. கள்ளிக்கும் வெட்டிக் கற்றாழைக்கும் வெட்டுகிறது.
    After cutting the kalli to cut the kattalai.

  367. கள்ளிக்குத் தண்ணீர் கண்ணிலே, நீலிக்குத் தண்ணீர் நிமையிலே.
    The tears of a thievish woman are in her eyes, those of an abandoned woman are in her eyebrows.

  368. கள்ளிக்கு கலநீர் கண்ணிலே.
    A thievish woman has a kalam of tears in her eyes.

  369. கள்ளிக்கு வேலி ஏன், சுள்ளிக்கு கோடாலி ஏன்?
    What avails a fence against a thievish woman, or an axe for cutting twigs?

  370. கள்ளும் சூதும் இருக்கிற இடத்தில் கூத்திக் கள்ளனும் இருப்பான்.
    Where there is theft and gambling, there will also be a whore-monger.

  371. கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.
    Should he drink toddy, he will tell the truth.

  372. கறக்கிறது உழக்குப் பால், உதைக்கிறது பல்லுப் பறக்க.
    Yielding an ulak of milk, and kicking out the teeth.

  373. கறந்த பாலும் எச்சில் பிறந்த பிள்ளையும் எச்சில்.
    First drawn milk is unclean, and so is a first-born child.

  374. கறந்த பால் முலைக்கு ஏறுமா?
    Will the milk that has been drawn, again enter the udder?

  375. கறந்த பாலைக் காய்ச்சாமற் குடித்தால் காச வியாதி தானே எடுபடும்.
    If fresh drawn milk unboiled be drunk, consumption may be cured.

  376. கறுத்தது எல்லாம் தண்ணீர் வெளுத்தது எல்லாம் பால் என்கிறான்.
    Whatever is black he calls water, and whatever is white he calls milk.

  377. கறுப்பு வெளுப்பு ஆகாது, கசப்பு இனிப்பு ஆகாது.
    Black will not become white, nor bitter sweet.

  378. கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?
    Will a black dog become white?

  379. கறுமுறுகாந்தப் படலம் வாசிக்கிறார் கவிராயர்.
    The poet is reading the section on grumbling.

  380. கறையான் புற்றில் அரவம் குடிகொண்டதுபோல.
    Like a snake that occupied an ant-hill.

  381. கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.
    An ant-hill is useful to a snake.

  382. கற்கண்டாற் செய்த எட்டிக்கனி கசக்குமா?
    Will etti fruit made of sugar-candy taste bitter?

  383. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்பு அதுவே இனிப்பு.
    Learning when being acquired is bitter, but when possessed it is sweet.

  384. கற்பகதருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.
    Even a crow that lives in the kalpaka tree feeds on ambrosia.

  385. கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.
    He who gave the eye is he who taught.

  386. கற்பித்தவன் காப்பாற்றுவான்.
    He who preordained will protect or guide.

  387. கற்பில்லா அழகு வாசனை இல்லாப் பூ.
    Beauty without chastity, a flower without fragrance.

  388. கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?
    To practise a trick on him who taught it?

  389. கற்றவரது கோபம் நீரின் பிளவுபோல் மாறும்.
    The anger of the learned passes away as water recovers its surface after being divided.

  390. கற்றது கையளவு கல்லாது உலகளவு.
    What he has learnt is a handful, and what he has still to acquire is wide as the world.

  391. கற்றது சொல்லான் மற்று என்ன செய்வான்?
    What other service will he do for you who would not tell you what he has learnt?

  392. கற்றவனுக்கு வித்தை கால் நாழி.
    To the artist his art is but a quarter of a náli.

  393. கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன்போலே.
    Like one who boils and drinks his learning.

  394. கற்றறி மோழையாய் இராதே.
    Be not a learned fool.

  395. கற்றவனும் உண்பான், பெற்றவளும் உண்பாள்.
    A learned man and a fruitful woman will not suffer from want of food.

  396. கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சமும் போகாது.
    The ill odour of the karráli and the bad smell emitted from brass will not leave them.

  397. கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது.
    Though the karràlai be small, the elephant will not tread upon it.

  398. கற்றுக் கொடுத்த பேச்சும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் நிற்கும்.
    How long will words put into one’s mouth, and rice prepared for a journey, last?

  399. கற்றுக் கற்றுப் பேசாதே.
    Do not speak in a studied way.

  400. கற்றும் கற்றறிமோழை.
    Though he has learnt, he continues a learned fool.

  401. கற்றும் கற்றறிமோழையா?
    What, to be a learned fool?

  402. கற்றோர் அருமை கற்றோர் அறிவர்.
    The learned know the worth of the learned.

  403. கன ஆசை கன நஷ்டம்.
    Excessive desire entails great loss.

  404. கன எலி வளை எடாது.
    When rats are numerous, they do not burrow.

  405. கனக மாரி பொழிந்ததுபோலே.
    As it rained gold.

  406. கனஞ் செய்தால் இஷ்டம், கனவீனத்தால் நஷ்டம்.
    Dignity gains approval, meanness entails loss.

  407. கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை.
    Solid jewels are invaluable.

  408. கனத்தால் இனமாகும் பணத்தால் சனமாகும்.
    Dignity or worth increases relatives, wealth secures society.

  409. கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி.
    Virtue is the support of dignity.

  410. கனத்தைக் கனம் அறியும் கருவாட்டுப் பானையை நாய் அறியும்.
    Dignity is appreciated by dignity, the pot of dried fish is known to the dog.

  411. கன மூடன் கைப்பொருள் இழப்பான்.
    A great fool loses his substance.

  412. கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைவு.
    Even in its dreams the crow’s thoughts turn on eating filth.

  413. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
    Will the money seen in a dream meet one’s expenses?

  414. கனவில் கண்ட பொருள் கானலில் கண்ட புனல்.
    The wealth seen in a dream, the water observed in a mirage.

  415. கனவில் கண்ட சோறு பசி தீர்க்குமா?
    Will the rice consumed in a dream appease hunger?

  416. கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை.
    The story of a woman given in marriage to a man seen in a dream.

  417. கனிந்த பழம் தானே விழும்.
    Ripe fruit falls of itself.

  418. கனிந்த பழம் நீர் தின்றீர் காயை உலுக்கிவிட்டீர்.
    You have eaten the ripe fruit, and you have shaken off the unripe.

  419. கனியை விட்டுக் காயைத் தின்கிறதா?
    What, to leave ripe fruit and to eat unripe?

  420. கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை.
    Caste arises from action, it is not from birth.

  421. கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
    Will granite be dissolved by any amount of hail?

  422. கன்மத்தினால் வந்தது தன்மந்தினால் போகவேண்டும்.
    That which has come of action-sin-must go by alms giving religious merit.

  423. கன்று இருக்கக் காசத்தனை பால் கறவாப் பசு, கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா?
    Will a cow that gave milk worth a small coin while its calf lived, give a kalam after her calf is dead?

  424. கன்றுக்குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா கட்டுத்தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?
    Did they tell you to loose the calf or to pull up the peg?

  425. கன்றும் பசுவும் காடேறி மேய்ந்தால் கன்று கன்று கன்றுவழியே பசு பசு வழியே
    When the calf and cow go out to graze, each takes its own way.

  426. கன்றுகளாய்க் கூடிக் களை பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா செத்தை ஆகுமா?
    If a herd of calves weed the corn, will there be any straw, or even dry stubble?

  427. கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப்போலே.
    Like a cow that comes running on seeing her calf.

  428. கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான்.
    When the brazier begins to move, the potter will abandon his dwelling-place.

  429. கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.
    As an ass went on a pilgrimage before a copper-smith.

  430. கன்னி இருக்கக் காளை மணம் போகலாமா?
    When a virgin is yet unmarried, may the youth-her brother-marry?