Tamil Proverbs
translated by Peter Percival
கு
3793264Tamil Proverbs — குPeter Percival

கு.

  1. குங்கிலியத் தூபம் காட்டிச் சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?
    If indeed the incense has expelled the demon, where is the sign?-uplifted hands.

  2. குங்குமம் சுமந்த கழுதை பரிமளம் அறியுமா?
    Can the ass which carried the kungumam-a fragrant resin-appreciate scents?

  3. குங்குமக் கோதைக்கு அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
    The donation to the perfumed dame being five fanams, is five fanams to be assigned to the blind woman also?

  4. குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிட உள்ள சிரிப்பும் போனாற்போல.
    As if one lost his natural smile by taking medicine to induee a simpering expression.

  5. குடத்தில் ஏற்றிய விளக்கு.
    A lamp lit in an earthen pot.

  6. குடத்திற் பொன் கூத்து ஆடுமா?
    Will gold in a pot dance?

  7. குடப்பால் கறந்தாலும் குதிரை ஓட்டம் ஓடமாட்டாது.
    Though the cow gives a large pot of milk, it is not equal to the horse in speed.

  8. குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.
    Though it may yield a large pot of milk, a cow that destroys the roof is not desirable.

  9. குடம் தண்ணீரிற் கொள்ளி வைத்தாற்போல.
    As if a firebrand were put into a pot of water.

  10. குடலும் கூந்தலும் கொண்டது கொள்கை.
    Habit is the rule of the stomach and the hair.

  11. குடல் கூழுக்கு அழுகிறதாம் கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.
    It is said that the stomach cries for gruel, and the tresses for flowers.

  12. குடல் அறுந்த நரி எந்தமட்டும் ஓடும்?
    How far can a jackal run after its bowels are dislodged?

  13. குடல் அறுந்த கோழி எங்கே போகும்?
    Whither will a fowl go after its entrails have been exposed?

  14. குடி இருந்து அறி வழி நடந்து அறி.
    Learn the character of a person by dwelling with him, and the condition of a road by walking in it.

  15. குடி இருந்து பார் கூட்டுப்பயிர் இட்டுப் பார்.
    Test his social qualities by living with him, and his honesty by joint tillage.

  16. குடி இருப்பது குச்சுவீடு, கனாக் கண்டது மச்சுமாளிகை.
    He who dwells in a humble cottage dreams of ceiled apartments.

  17. குடி இல்லா வீட்டிற் குண்டுப்பெருச்சாளி உலாவும்.
    Bandycootes will run about in an uninhabited house.

  18. குடி இல்லா ஊரிலே அடி இட ஆகாது.
    It is a risk to set a foot in an uninhabited village.

  19. குடி இல்லா ஊருக்கு நரி இராசன்.
    A jackal is king in a deserted village.

  20. குடி உடையானே முடி உடையான்.
    He is fit for kingship who is approved by the people.

  21. குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்.
    He has gruel to drink, and washes his mouth with rose water.

  22. குடிக்கிற பாலை வெடிப்பிலே வார்க்கிறதா?
    What, is it to pour down the drinkable milk into a crevice?

  23. குடிக்கிறது காடி நீர், அதற்குத் தங்கவட்டிலா?
    What you drink is sour gruel, do you require a cup of fine gold for it?

  24. குடிக்கிறது கூழாம் இருக்கிறது சிங்காசனமாம்.
    Living on gruel and sitting on a throne.

  25. குடிக்கிற வீடு விடியுமா?
    Will the family of a drunkard prosper?

  26. குடித்தனமோ துரைத்தனமோ எது பெரிது?
    Whether is greater, the government of a family or of a state?

  27. குடித்தனம் மேலிட வேண்டி பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டான்.
    Wishing to elevate his family he married a Pidari-village goddess.

  28. குடித்தனமென்று பண்ணினால் நன்மையும் வரும் தீமையும் வரும்.
    If one becomes a householder, he must expect both good and evil.

  29. குடிபோன வீட்டிலே வறட்டு நாய் காத்ததுபோல.
    As a lean dog watched a deserted house.

  30. குடிமதம் அடிபடத் தீரும்.
    The madness of a drunkard may be cured by beating.

  31. குடியனும் வெறியனும் சரி.
    A drunkard and a mad man are alike.

  32. குடியாத வீடு விடியாது.
    The family of a drunkard is always benighted.

  33. குடியிற் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.
    If the bowels of the house-wife burn, her cloth hanging on the lino will burn also.

  34. குடியில்லா ஊரிலே ஒற்றைப் பணக்காரன்.
    He is the only wealthy man in a deserted village.

  35. குடியிற் பிறந்து குரங்கு ஆட்டம் ஆடுதல்.
    Born in a good family, and playing the monkey.

  36. குடியிற் பிறந்து செடியில் விழுந்தான்.
    Born in a good family and falling into a bush.

  37. குடி வைத்துக் கொண்டாயோ கொள்ளி வைத்துக் கொண்டாயோ?
    Have you taken a family to dwell with you? Or have you taken firebrands?

  38. குடி வைத்த வீட்டிற் கொள்ளி வைக்கலாமா?
    Is it proper to burn down a house after admitting a family?

  39. குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.
    As a wolf entered a fold of lambs.

  40. குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான்.
    He who breeds divisions in a family shall be cuffed to death.

  41. குட்டிக் கரணம் போட்டாலும் லோபன் கொடான்.
    The miser will give nothing though you tumble heels overhead.

  42. குட்டிச் சுவரிலே தேள் கொட்ட, கட்டுத் தறியிலே நெறி இடுமா?
    If a scorpion sting in a ruinous dwarf wall, will the glandular swelling appear in the stall?

  43. குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டுமா?
    Does the sting of a scorpion in a ruinous wall, produce a glandular swelling in a water-pot?

  44. குட்டிச் சுவரை முட்ட வெள்ளெழுத்தா?
    Is he so dim-sighted as to stumble against a ruinous wall?

  45. குட்டி போட்ட பூனை போல் அலைகிறான்.
    He wanders about like a cat that has kittened.

  46. குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா?
    Can a cuff already inflicted and water that has run into a pit be recalled?

  47. குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது.
    Though it become fat, the flesh of a kid is always clammy.

  48. குட்டி குலைத்து நாய்பேரில் வைக்கிறது போல.
    Like pups barking and creating a quarrel among dogs.

  49. குட்டி நாய்கொண்டு வேட்டை ஆடினது போல.
    Like hunting with pups.

  50. குட்டு மானம் தப்பிக் குசவனோடே பேசினால், சட்டையும் பண்ணான், சட்டியும் கொடான்.
    If yon speak familiarly with a potter, he will not respect you, nor will he supply you with chatties.

  51. குணத்தை மாற்றக் குரு இல்லை.
    No guroo-a religious teacher-can change a man's temperament.
    A Guru among the Hindus is regarded as a spiritual parent from whom the youth receives the initiatory mantra or prayer, and who conducts the ceremonies necessary at various seasons of infancy and youth, up to the period of investiture with the sacred thread or string: this person may be the natural parent or the religious preceptor. The word Guru is also used for a teacher or preceptor generally.

  52. குணத்திற்கு அழுகிறதா, பிணத்திற்கு அழுகிறதா?
    Is the weeping on account of the virtue of the deceased or does it relate to his corpse?

  53. குணம் உற்றவன் மணம் உற்றவன், குணம் அற்றவன் மணம் அற்றவன்.
    A good-natured man has an engaging exterior, an ill-natured man has a repulsive aspect.

  54. குணம் பாதி கொண்ட நோவு பாதி.
    His suffering is due partly to his faint-heartedness, and partly to a disease.

  55. குண்டாக் கரணம் போட்டாலும் பிண்டாச் சோற்றுக்கு வழி இல்லை.
    Though he makes somersaults to all he sees, he has no food to eat.

  56. குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
    If starved even a horse will eat straw.

  57. குண்டி எத்தனை கோணற் கோணினாலும் சுமை வீட்டிற் போய்ச் சேர்ந்தாலே சரி.
    No matter how the body may be bent if the burden be carried home.

  58. குண்டி அறுந்த பருந்துபோல.
    Like a kite with a broken tail.

  59. குண்டுச் சட்டியிலே குதிரை ஓட்டுகிறான்.
    He displays his horsemanship in an earthen pot.

  60. குண்டு பட்டுச் சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்.
    It is said that he who survived a gunshot wound, died of the bite of an insect.

  61. குண்டுச் சட்டியிற் கரணம் போடலாமா?
    Can one turn a somersault in an earthen pot?

  62. குண்டுப் பெருச்சாளியும் வண்டுபோல.
    The bandycoote is also like a beetle.

  63. குண்டுணி சொல்லுகிறவனுக்கு இருநாக்கு கட்டுவிரியனுக்கும் இருநாக்கு.
    A slanderer and a snake of deadly poison have each two tongues.

  64. குண்டை பலத்தால் குடி பலக்கும்.
    As kine increase, a household increases.

  65. குதி குதி என்பார்கள் எல்லாரும், கூடக் குதிப்பார் இல்லை.
    They will all say leap, leap into the pyre, but there is none willing to leap with me.

  66. குதித்துக் குதித்து மா இடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டையே.
    Though she may leap joyously and pound the grain, the slave woman gets but one cake.

  67. குதிரை குருடானாலும் கொள்ளுத் தின்கிறதிற் குறைச்சல் இல்லை.
    Though blind, the horse does not eat the less grain.

  68. குதிரை கொண்டால் கலினத்துக்கு வழக்கா?
    When you have bought the horse, is there any occasion for disputing about its bit?

  69. குதிரையின் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை?
    Was it not because the Creator knew the nature of the horse that he did not provide him with horns?

  70. குதிரை செத்ததல்லாமற் சேணம் சுமக்க வேலை ஆயிற்று.
    Besides the death of the horse there is the saddle also to be carried.

  71. குதிரைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.
    The horse and the dog like a change of place.

  72. குதிரை ஏற அதிஷ்டம் இருந்தாற் குண்டியின் கீழ் வந்து நுழையாதா?
    If it be your good fortune to ride, will not your horse come and place itself under your seat?

  73. குதிரை நல்லதுதான் சுழி கெட்டது.
    It is certainly a good horse, but its circular marks are bad.
    The circlets of hair on a horse are generally observed by dealers and owners very carefully.

  74. குதிரை ஏறி என்ன, கோணக் கொம்பு ஊதி என்ன, வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.
    What if you do ride a horse, and have a horn blown before you? There is a great distance between the worthless and reputation.

  75. குதிரை பாகனைத் தள்ளுவதும் அல்லாமல் குழியும் தோண்டுகிறதாம்.
    It is said that the horse has not only thrown its rider, but is digging his grave.

  76. குதிரை செத்தது அல்லாமல் குழி தோண்ட மூன்று பணமா?
    Besides losing the horse, have I to pay three fanams to bury him?

  77. குதிரையும் காதம் கிழவியும் காதம்.
    The horse is ten miles before you, and the old woman is ten miles behind you.

  78. குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்க கூப்பிட்டக் குரலுக்கு ஏனென்ன.
    You will attend to my horse, ply the sledge hammer and answer my calls.

  79. குதிரை இருப்பு அறியும் கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
    The horse knows his rider, and a wife her husband.

  80. குத்தி வடித்தாலும் சம்பா குப்பையிலே போட்டாலும் தங்கம்.
    Though pounded and boiled it is samba-superior rice-though cast on the rubbish heap it is gold.

  81. குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்கும்?
    A cuff may be borne, can hunger?

  82. குந்தி இருந்து தின்றால் குன்று மாளும்.
    If you eat properly seated you may consume a heap of rice.

  83. குபேரன் பட்டணத்திலும் விறகு சுமக்கிறவன் உண்டு.
    Even in the city of Kubèran there were firewood carriers.

  84. குபேரன் பட்டணம் கொள்ளைபோனாலும் அதிஷ்டவீனனுக்கு அகப்பைக் காம்பும் அகப்படுமா?
    Though the city of Kubèran be despoiled, will the unfortunate obtain even the handle of a wooden spoon?

  85. குப்புற விழுந்து தவம் செய்தாலும் குருக்களுக்கு மோட்சம் இல்லை.
    Though they may prostrate themselves and perform penance, religious teachers do not attain heaven.

  86. குப்புற விழுந்தும் மீசையிலே மண் படவில்லை என்கிறான்.
    Though he fell flat on his face, he says that his mustache did not touch the ground.

  87. குப்பையில் முளைத்த கீரை கப்பலுக்குக் காலாகுமா?
    Will a plant grown on a dunghill answer for the mast of a ship?

  88. குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறினதுபோல.
    As a creeper springing on a dunghill climbed on a roof.

  89. குப்பையின்றிப் பயிர் விளையாது.
    Without manure the growing grain will not yield a good crop.

  90. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி குன்றிமணிதான்.
    Though it lies on the dunghill the kunrimani-abrus precatorius-remains unchanged.

  91. குப்பையிற் புதைத்தாலும் குன்றிமணி நிறம் போகாது.
    Though the kunrimani be buried in the dunghill its colour will not change.

  92. குப்பை உயர்ந்தது கோபுரம் தாழ்ந்தது.
    The rubbish heap has risen, the tower has sunk.

  93. குப்பை உயர்ந்ததென்ன கோபுரம் தாழ்ந்ததென்ன?
    How is it that the rubbish heap has risen, and the tower sunk?

  94. குப்பையும் கோழியும்போலக் குருவும் சீஷனும்.
    The teacher and his disciple are like the dunghill and the fowl.

  95. குமரி ஒரு பிள்ளை கோடி ஒரு வெள்ளை.
    A woman is young till she bears a child, and cloth is new till it is washed.

  96. குமரி தனிவழியே போனாலும் கொட்டாவி தனிவழியே போகாது.
    Though a young woman may go on her way alone, yawning is never alone.

  97. குமரியாய் இருக்கையிற் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கிற போது திண்டாட்டம்.
    When young, a woman is full of hilarity, when old her portion is vexation.

  98. கும்பிட்டுக் கடன் கொடாதே கும்பிட்டுக் கடன் வாங்காதே.
    Neither lend nor borrow beseechingly.

  99. கும்பிடப் போன இடத்தில் கோயில் இடிந்து விழுந்தது.
    When I went to worship the temple fell.

  100. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல்.
    As the deity one went to worship came to meet one cross wise.

  101. கும்பிட்ட தெய்வம் குலதெய்வம்.
    The deity I worship is my hereditary deity.

  102. கும்பிடும் கள்ளர் குழைத்திடும் கள்ளர்.
    Obsequious rogues, deceitful friends.

  103. குயவனுக்குப் பல நாளை வேலை, தடி அடிகாரனுக்கு ஒரு நிமிஷ வேலை.
    That which cost the potter many days labour, is but the labour of a moment to the breaker.

  104. குயவா கலசம் கொண்டுவா, இடையா பால் கொடு என்றாற் போல.
    Like saying to the potter bring a vessel, and to the shepherd fill it with milk.

  105. குயில் கூவினாற்போல.
    Like the warbling of the Indian cuckoo.

  106. குயிற் குரலும் மயில் அழகும்போல.
    Like the voice of the Indian cuckoo, and the beauty of the peacock.

  107. குரங்கின் கைப் பூமாலை.
    A garland of flowers in the hand of a monkey.

  108. குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணங்குருவி கூண்டு இழந்தது.
    The advice which the pendulous bird Loxia, gave to the monkey ended in the destruction of its own nest.

  109. குரங்குக்கும் தன்குட்டி பொன்குட்டி.
    Even to the monkey its own young is precious.

  110. குரங்குப் புண் ஆறாது.
    A sore on a monkey never heals.

  111. குரங்குப் புண் பிரமாண்டம்.
    A sore of the monkey is enormously large.

  112. குரங்குப் பிணமும் குறப் பிணமும் கண்டவர் இல்லை.
    No one ever saw the dead body of a monkey, or the corpse of a kuravan-a mountaineer.

  113. குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.
    He tests it by another as a monkey tests an object by the hand of its young.

  114. குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.
    Lay hold of a thing as firmly as a monkey.

  115. குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொப்பு கிளை எல்லாம் தத்திப் பாயும்.
    If a monkey be asked for his droppings for medicinal purposes, he will leap from branch to branch.

  116. குரங்கு எல்லாம் ஒரு முகம்.
    All monkeys have faces alike.

  117. குரங்கு ஆனாலும் குலத்தில் கொள்ளவேண்டும்.
    Though she be a mere monkey, one should take a wife in one's own tribe.

  118. குரங்கு ஏறாத கொம்பு உண்டா?
    Is there a branch the monkey has not climbed?

  119. குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.
    All monkeys go about in troops.

  120. குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை.
    The story of a firebrand in the hand of a monkey.

  121. குரு இல்லாத சீஷன் உண்டா?
    Is there a disciple without a Guru-teacher?

  122. குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை.
    There is no art without a teacher, and no profit without capital.

  123. குரு என வந்தான் திரு உரை தந்தான்.
    He came as a Guru; he gave sacred instruction.

  124. குருக்கள் பிழைத்தது மறுபிறப்பு.
    The escape of the religious teacher was as it were a second birth.

  125. குருடன் கையில் விலாங்கு அகப்பட்டதுபோல.
    As an eel was caught in the hand of a blind man.

  126. குருடனுக்கு வேண்டியது கோல்.
    The need of a blind man is a staff.

  127. குருடனுக்கு வேண்டியது கண்.
    What the blind want is eye-sight.

  128. குருடனுக்குக் குருடன் கோல் பிடிக்கலாமா?
    Can the blind lead the blind with a staff?

  129. குருடன் ஆடு மேய்க்க எட்டாளுக்கு வேலையா?
    Is it a work for eight men to help a blind man to feed sheep?

  130. குருடன் கூத்துப் பார்க்கப் போனால் பயன் என்ன?
    What advantage will the blind man gain by attending a comedy?

  131. குருடனுக்குப் பால் கொக்குப் போன்றது.
    To the blind milk was like a heron.

  132. குருடன் பெண்டாட்டி கூனனோடு உறவாடினாள்.
    The wife of a blind man became intimate with a hunch-backed man.

  133. குருடன் பெண்டிரை அடித்தாற்போல.
    As if a blind man beat his wife.

  134. குருடனைப் பார்த்து இராச விழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா?
    If requested to assume the looks of a king, can a blind man do so?

  135. குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.
    As if a blind man was asked to assay metals.

  136. குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.
    Like snatching away the staff of the blind.

  137. குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்.
    if the blind lead the blind, both will fall into the pit.

  138. குருடி தண்ணீர்க்குப் போக எட்டாள் மினகெட்டதுபோல்.
    As the work of eight persons was stopped by reason of a blind woman going to fetch water.

  139. குருடும் செவிடும் கூத்துப் பார்த்ததுபோல.
    As the blind and the deaf attended a comedy.

  140. குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
    The excuse of a blind horse was his stumbling.

  141. குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்ததுபோல.
    As a blind cat leaped on the cross beam.

  142. குருட்டுக்கொக்கிற்கு ஊர்க்குளமே சாட்சி.
    The village tank is the witness of the blind crane.

  143. குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கியதுபோல.
    As a blind fowl was over anxious to feed on bran.

  144. குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவது என்ன?
    Why adorn blind eyes with collyrium?

  145. குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தைக்கு அடங்காதவனும் சண்டி.
    He who will not bear the words of this Guru-religious teacher-and he who disobeys his mother, are worthless.

  146. குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
    He who forgets the words of his Guru will forfeit the divine favor and perish.

  147. குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டித் தூக்கலாமா?
    Can a palmyra fruit be suspended from the neck of a small bird?

  148. குருவிக்குத் தக்க இராம அத்திரம் அல்லவோ?
    Is not the weapon of Rama suited to the bird?

  149. குருவிக்குத் தக்க ராமேசுரம்.
    Raméswaram suited to the bird.
    This is I think a perversion of the foregoing proverb. An aged or feeble person may say, my Raméswaram, pilgrimage, efforts, must be moderate.

  150. குருவிக்குத் தக்க பாரம்.
    A burden suited to the bird.

  151. குருவிக் கூட்டைக் கோலாற் கலைக்காதே.
    Never disturb the nest of a bird with a stick.

  152. குருவுக்கு மிஞ்சின சீஷனா?
    Is there a disciple who is above his Guru?

  153. குருவுக்கு நாமம் குழைத்துப் போடுவான்.
    He will deceive his own Guru.

  154. குருவுக்குத் துரோகம் செய்தாலும் குடலுக்குத் துரோகம் செய்யக்கூடாது.
    Though a Guru may be deceived, the stomach cannot.

  155. குரு வேஷம் கொண்டவன் எல்லாம் குரு ஆவானா?
    Are all religious teachers who have assumed the garb?

  156. குலத்தைக் கெடுத்த கோடாலிக்காம்பு.
    The handle of an axe that destroyed its own species.
    The tree from which its handle was taken, was felled by the axe.

  157. குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு.
    It is said that a monkey will destroy its own species.

  158. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்.
    It becomes a lawful wife to honour her husband.

  159. குலமகன் குலத்துக்கு அழுவான், மூக்கறையன் மூக்குக்கு அழுவான்.
    The high-born mourns the loss of caste, and the man who has lost his nose, his nose.

  160. குலமும் ஒன்று குறியும் ஒன்று.
    Birth and external sign are at variance.

  161. குலம் புகுந்தும் குறை தீரவில்லை.
    Though he has entered another tribe he is still in want.

  162. குலம் குலத்தோடே வெள்ளம் ஆற்றோடே.
    Tribe goes with tribe, the flood with the river.

  163. குலம் குலத்தோடே வெள்ளாடு தன்னோடே.
    A tribe associates with its own tribe, and goats follow their own kind.

  164. குலம் குப்பையிலே பணம் பந்தியிலே.
    High birth lies on the dunghill, while wealth is at the festive board.

  165. குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
    Arts appropriate to a family are partly intuitive and partly acquired.

  166. குலைக்கிற நாய் கடிக்க அறியாது.
    A barking dog does not bite.

  167. குலைக்கிற நாய்க்கு எலும்பைப் போட்டாற்போல.
    Like throwing a bone to a barking dog.

  168. குலைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
    Will a barking dog avail in hunting?

  169. குலைக்கிற நாயின் வாயிலே கோலைக் கொடுத்தால் ஊர் எங்கும் கொண்டோடிக் குலைக்கும்.
    If a staff be put into the mouth of a noisy dog, it will carry it through the village barking.

  170. குலையாத நாய் குதிங்காலைக் கடிக்கும்.
    A silent dog will bite the heels.

  171. குழந்தை பட்டினியும் கோயில் பட்டினியும் இல்லை.
    Infants and temple servants do not suffer from hunger.

  172. குழந்தைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.
    Children and dogs are pleased with a change of place.

  173. குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
    Children and gods best agree with their admirers.

  174. குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.
    The fever of children and the spite of a slanderer are bad.

  175. குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு இலாபம்.
    The sleep of a child is advantageous to the mother.

  176. குழந்தையின் தேகம்போல்.
    Tender as the body of an infant.

  177. குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே.
    My child, do not sink into the pit.

  178. குழப்படி கண்டு திரைகடல் ஏங்குமா?
    Has the stormy weather set the whole sea in motion?

  179. குழம்புப் பால் குடிக்கவும் குமரா கண்டவலியா?
    O my youthful son, is your throat pained by drinking thick milk?

  180. குழியிற் பயிரை எடுத்துக் கூரைமேல் இடலாமா?
    Is it right to train a parasite to the roof?

  181. குழியிற் பிள்ளையை நரி சுற்றுகிறாப்போலே.
    Like a jackal going round the grave of a child.

  182. குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை இடலாமா?
    Is it proper to agitate the tank to supply prey for kites?

  183. குளத்துக்கு மழை குந்தாணியா?
    Are rain drops the weight of a mortar to a tank?

  184. குளத்திற் போட்டுக் கிணற்றில் தேடலாமா?
    Having put it into the tank, do you seek it in the well?

  185. குளத்தோடு கோபித்துக் கால் கழுவாதவன்போல்.
    Like the man who would not wash his feet in the tank because he was angry with it.

  186. குளப் படி நீர் இறைத்தாலும் கடற் பள்ளம் நிரம்புமா?
    Will the hollow of the sea be filled by draining a tank down to the lowest step?

  187. குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?
    When a tank bursts, do they dispute about turns?

  188. குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ?
    Will not he who watches the tank drink?

  189. குளம் வற்றியும் முறைவீதம் உண்டா?
    Why dispute about your turn for drawing water seeing that the tank is dried up?

  190. குளம் வெட்டுமுன்னே முதலை குடி இருக்குமா?
    Before the tank is dug will the alligator go to dwell therein?

  191. குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தாற்போல.
    Like poking a wasp's nest with a stick.

  192. குளவிக் கூட்டிலே கல்லுவிட்டு எறிகிறதா?
    What! throw a stone at a wasp's nest?

  193. குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை.
    A green caterpillar is the offspring of a wasp.

  194. குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவதுபோல.
    Like a wasp changing worms to its own colour.

  195. குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டது போல.
    As one smeared himself with mud After bathing.

  196. குளிர்ந்த கொள்ளியாய் இருந்து குடியைக் கெடுக்கலாமா?
    Pretending to be an extinguished firebrand, is it proper to destroy the house?

  197. குள்ளப் பார்ப்பான் பள்ளத்தில் விழுந்தான் தண்டு எடு தடி எடு.
    The dwarf Brahman has fallen into a pit, take a staff, take a stick.

  198. குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்கிறான்.
    He sounds the depth by means of a dwarf.

  199. குள்ளன் குடி கெடுப்பான் குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள்.
    A dwarf will destroy a family; his wife will destroy the whole village.

  200. குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் காயம் தின்பான்.
    If the wife of a mountaineer is brought to bed, her husband take the prescribed stimulant.

  201. குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
    Disputes among mountaineers and shepherds are not easily settled.

  202. குற வழக்குக்குச் சக்கிலி வழக்கு இலேசு.
    Disputes among chakliyars are more easily settled than those among mountaineers.

  203. குறுணிப் பால் கறந்தபோதிலும் கூரை பிடுங்கப் பார்த்திருக்கலாமா?
    May one suffer his cow to destroy his roof although she yields a kuruni of milk at a meal?

  204. குறுணி மைதான் இட்டாலும் குருடு குருடே.
    Though a kuruni of collyrium be applied to the eyes of the blind, the blindness remains.

  205. குறும்பியுள்ள காது தினவு தின்னும்.
    A ceruminous ear will itch.

  206. குறும்பைத் தவிர்க்கும் குடிதாங்கி.
    The supporter who puts an end to inhuman acts.

  207. குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.
    A thoroughly learned man is one of a lac.

  208. குறை குடம் தளம்பும் நிறை குடம் தளம்பாது.
    A water pot not full is agitated, a full pot is not.

  209. குறையச் சொல்லி நிறைய அள.
    Give more than you profess to sell.

  210. குறையுள்ளோர்க்கு உண்டு குறாவுதல் கறையுள்ளோர்க்கு உண்டு கரவு.
    The guilty are dejected, those that have a tarnished reputation elude observation.

  211. குறை வேலையைக் குருக்களுக்கும் காட்டல் ஆகாது.
    An unfinished work ought not to be shown even to a Guru-master.

  212. குறை வேலையை அம்பலத்திற் கொண்டுவரலாமா?
    Is it proper to expose an unfinished work for sale or otherwise?

  213. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும் குறும்பியுள்ள காது தினவு தின்னும்.
    A guilty conscience is agitated, a foul ear itches.

  214. குற்றம் மறைப்பதில் மற்றொரு குற்றமும் சேரும்.
    By concealing one fault another may arise.

  215. குற்ற மனச்சாட்சி கூடி வாழ் சத்துரு.
    A guilty conscience is an enemy that lives with its possessor.

  216. குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.
    Distinction attained by wrong makes reformation difficult.

  217. குற்றத் தண்டனையிலும் சுத்த தண்டனை நல்லது.
    Undeserved punishment is better than deserved punishment.

  218. குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லை.
    If every fault be noticed, all intercourse must cease.

  219. குன்றிமணிக்கும் குண்டியிற் கறுப்பு.
    Even a kunrimani seed-abrus precatorius-has a black spot on it.