Tamil Proverbs
translated by Peter Percival
கொ
3799369Tamil Proverbs — கொPeter Percival

கொ.

  1. கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ நெருப்பிற் குதிப்பார்க்குச் சுவர்க்கமோ?
    Which attains swerga the mere boaster, or the self-immolated?

  2. கொக்கு இளங்குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை.
    No one has seen a young crane, not a straight cocoanut tree.

  3. கொக்குக்கு உண்டா வீர சைவம்?
    Does the stork observe the rules of Linga-worship?
    The strict Saivite is a rigid vegetarian.

  4. கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.
    As if a falcon fell among herons.

  5. கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.
    As if a bandycoote rushed on to prey on a stork.

  6. கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?
    Does the crane know how to carry away a chicken?

  7. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?
    O devotee, did you mistake me for a stork?

  8. கொங்கிலே குறுணி விற்கிறது, இங்கு என்னத்திற்கு.
    Why remain here when grain sells cheap in the Kongu country.

  9. கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.
    As a carbuncle appeared on the back of a mosquito.

  10. கொசுகிலே குறுணி பால் கறக்கலாமா?
    Can you draw from a mosquito a kuruni of milk?

  11. கொசுகிலே பிளவை அதிலே நீரழிவு, அறுக்கிறது எங்கே அட்டை விடுகிறது எங்கே?
    A mosquito suffering from a carbuncle, has also diabetes: where shall we put in the lancet, and how apply leeches?

  12. கொசுகே கொசுகே தலை முழுகு நான் மாட்டேன் சனிக்கிழமை.
    O mosquito, mosquito, bathe your head; I will not, it is Saturday.

  13. கொசுகைப் பொருட்டாய் எண்ணிக் கருடன் எதிர்த்தாற்போல.
    As if a hawk assailed a mosquito imagining it to be a rival.

  14. கொசுகை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறதா?
    What! do you strain out a gnat and swallow a camel?

  15. கொசுகை வடிப்பார், அசுகைப்படுவார்.
    Those who strain out gnats are naturally suspected.

  16. கொச்சிக்குப் போனவன் செய்தியைப் பார், தன் குருவை விற்றவன் செய்தியைப் பார்.
    See the result of his having gone to Cochin, and of one who betrayed his Guru.

  17. கொஞ்சத்தில் இருக்கிறதா குரங்கு மிளகுநீர் குடிக்கிறது?
    What, is it a small thing for a monkey to drink pepper water?

  18. கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.
    Not one even of ten millions is unfaithful in a little thing.

  19. கொடிகள் அருகான மரத்திலே படரும்.
    Creepers spread over the trees that grow near them.

  20. கொடிக்குக் காய் கனத்திருக்குமா?
    Is its fruit burdensome to the creeper?

  21. கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.
    It is an evil omen to a tribe for a girl to be born with her navel-string round the body.

  22. கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.
    Palaniándi gives and Subbanándi eats.

  23. கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.
    He who was not disposed to contribute to the drama spoke disparagingly of it.

  24. கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?
    Whilst bestowing gifts why fall prostrate at the feet of a leper?

  25. கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.
    As a niggardly shepherd pointed to a sheep that was with young.

  26. கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று.
    A jungle inhabited by fierce tigers is better than a country ruled by a cruel tyrant.

  27. கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.
    It is not good to live under a tyrant king.

  28. கொடுத்ததைக் கேட்டால் அடுத்து வரும் பகை.
    If that which has been given be demanded hatred ensues.

  29. கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.
    They praise the liberal, but reproach the niggard.

  30. கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.
    The liberal are fathers, niggards are useless.

  31. கொடுத்ததைக் கொடுக்கும் குறளிப் பிசாசு.
    The dwarf demon returns only that which had been given to it.
    Jugglery is generally attributed by the common people to the power of a dwarf demon which, retaining the materials entrusted to it, gives them one by one to the juggler as he may want them.

  32. கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.
    The liberal have all things, the niggardly nothing.

  33. கொடுத்து உறவுகொள், கோளன் என்று இரேல்.
    Be liberal and friendly, avoid being called a talebearer.

  34. கொடுப்பாரைத் தடுக்காதே.
    Do not check the liberal.

  35. கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.
    The kind-hearted is yielding.

  36. கொடும் பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும்.
    However cruel a mother-in-law may be, she is nevertheless desirable.

  37. கொட்டிக்கிழங்கு வெட்டுகிறவளுக்குக் கோயிலில் வந்து ஆடத்தெரியுமா?
    Can the woman who digs up roots dance before a temple idol?

  38. கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
    Though measured again and again, a kuruni will not become a pathakku.

  39. கொட்டினால் தேள் கொட்டா விட்டாற் பிள்ளைப்பூச்சியா?
    If it stings it is scorpion, if it does not sting is it only a gryllus?

  40. கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம்.
    If despised by her husband, all will slight her.

  41. கொண்டவனுடைய பலத்தைக் கண்டால் குப்பைமேடு ஏறிச்சண்டை செய்வாள்.
    If she finds out the strength of her husband, she will get on the rubbish heap and fight.

  42. கொண்டார் முனியிற் கண்டார் முனிவர்.
    If husbands treat their wives angrily, others will do so too.

  43. கொண்டு குலம் பேசுகிறதா?
    Do you speak lightly of a family into which you have chosen to marry?

  44. கொண்டைக்குப் பூ சூடிச் சண்டைக்கு நிற்கிறது.
    To stand up to quarrel with a chaplet of flowers on the tresses.

  45. கொண்டைக்குப் பூ சூடுகிறதா தாடிக்குப் பூ சூடுகிறதா?
    Are flowers for the tresses, or for the beard?

  46. கொண்டோர் எல்லாம் பெண்டிர் அல்ல.
    All that are betrothed are not real wives.

  47. கொய்சகத்தில் கொள்ளி வைத்துக்கொண்டதுபோல.
    Like keeping a firebrand in the border of her own cloth.

  48. கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
    Can needles be sold in a street of smiths?

  49. கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம்.
    It is said that a monkey seeing the weakness of a blacksmith urged him to adorn his legs with rings.

  50. கொல்லன் பிணம் விறைத்தாற்போல.
    As the smith's corpse became stiff.

  51. கொல்லுகிறதும் சோறு பிழைப்பிக்கிறதும் சோறு.
    Rice kills and it makes alive.

  52. கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினதுபோல.
    Like a wild jackal showing his teeth.

  53. கொல்லைக் காட்டில் நரியைக் குடி வைத்துக்கொண்டதுபோல்.
    Like encouraging jackals in a field.

  54. கொல்லைக்குப் பல்லி குடிக்குச் சகுனி.
    He is a palli plant,-Bachnera Asiatica-to a garden, and a Saguni to a family.
    Both are injurious.

  55. கொல்லையில் குற்றியை அடைந்த புல்லு உழவர் உழுபடைக்குக் கெடுமோ?
    Will the ploughshare destroy the grass at the foot of scarecrows in the field?

  56. கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா?
    Are small birds famished because the fields lie waste?

  57. கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குடியனுக்கு முறையும் இல்லை.
    The steamed cake has no head, nor has a drunkard sense to regard the rules of relationship.

  58. கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லைக் காலும் இல்லை, குறவருக்கு நெறியும் இல்லை முறையும் இல்லை.
    The kolukkattai has neither head nor foot, foresters are neither virtuous nor mannerly.

  59. கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.
    He who is thin is a mere straw to him who is fat.

  60. கொள் என்றால் வாயைத் திறக்கிறது, கடிவாளம் என்றால் வாயை மூடுகிறதா?
    What! opening the mouth when one says gram, and covering it when one says bridle?

  61. கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.
    There are neither buyers nor sellers.

  62. கொள்ளி கொண்டு தலை சொறிகிறதா?
    Do you scratch your head with a firebrand?

  63. கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.
    Though you may encounter a firebrand, you must not appear before the planet Venus.

  64. கொள்ளிக் கட்டையால் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடுவடுவாய்ச் சுடுகிறாய்.
    Because burning with a firebrand will produce blisters, you are branding me with a plantain fruit,

  65. கொள்ளும்வரையில் கொண்டாட்டம் கொண்டபிறகு திண்டாட்டம்.
    Great pleasure till attained, great misery afterwards.

  66. கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.
    Even when going to plunder association is bad.

  67. கொள்ளைக்கும் ஊழிக்கும் தப்பு.
    Escape from plunder and pestilence.

  68. கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
    The learned are more than kings.

  69. கொன்றாற் பாவம் தின்றால் தீரும்.
    The sin arising from killing is expiated by eating the flesh so killed.