கௌ.
-
- கௌசிகத்து ஒளியில் எவர்க்கும் ஒளிரும்.
- Near the candle-stick it will be clear to all.
-
- கௌவை உடையார் காலைத் தொடு.
- Touch the feet of those with whom you have aught to do.
-
- கௌவை கருதேன்.
- Be mindful of your business.
-
- கௌவைச் சொல்லில் எவர்க்கும் பகை.
- Abusive words will create enmity.
-
- கௌவைப்பட்டால் காயத்தில் ஒரு முழம் நீளுமா?
- Can anxiety add length to one’s body?
-
- கௌவையதில்லான் திவ்விய சொல்லான்.
- He who has no concern will not say any thing favourable.