3770414Tamil Proverbs — நPeter Percival

ந.

  1. நகத்தாலே கிள்ளுவதைக் கோடரிகொண்டு வெட்டுகிறதா?
    Do you use a hatchet when the nails would suffice?

  2. நகமும் சதையும்போலே வாழுகிறான்.
    United like the nails and the flesh.

  3. நகரைக்குப் பெத்தை வழிகாட்டுகிறதோ?
    Is a péttai-a small fish a guide to a nagarai fish?

  4. நகைக்கு மகிழ்ச்சி நட்புக்கு நஞ்சு.
    Merriment is the poison of friendship.

  5. நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும்.
    Reproachful words lead to enmity.

  6. நகைத்து இகழ்வோனை நாயென நினை.
    Regard him as a dog who laughs you to scorn.

  7. நக்குகிற நாய்க்குச் செக்கு என்றும் சிவ லிங்கம் என்றும் தெரியுமா?
    Does a dog addicted to licking, distinguish between an oil-press and a Siva linga?
    The linga, the symbol of the Saiva worship, is anointed with oil.

  8. நக்குகிறபொழுது நாவு எழும்புமா?
    Does the tongue rise when licking?
    When eating the food of another reproachful language is not used.

  9. நக்கு உண்டார் நாவு எழார்.
    Those who lick do not raise the tongue.
    Those who have eaten the food of another man will not reproach him.

  10. நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?
    Though a poisonous tree, will those who planted it cut it down?

  11. நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி மாணிக்கமே, குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி குன்றிமணியே.
    Though associated with poison, the stone on a cobra’s head is a gem; though it may be found in a dunghill, a kunrimani is still the same.

  12. நஞ்சு நாற்கலம் வேண்டுமா?
    Are four kalams of poison required?

  13. நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காதவழி.
    To a person unaccustomed to walk, the middle of his house is ten miles off.

  14. நடக்கிறது நடக்கட்டும் தெய்வம் இருக்கிறது.
    Let things take their course; there is a God.

  15. நடக்கும்கால் தவறுவதிலும் நா தவறுதல் கெட்டது.
    A slip of the tongue is worse than that of the foot.

  16. நடந்த பிள்ளை தவறுதாம் தாயார் செய்த தவத்தால்.
    It is said to be owing to the penance of the mother that the child that could walk has begun to crawl.

  17. நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி.
    The goddess of fortune dwells in the feet of the industrious, the goddess of misfortune dwells in the feet of the sluggard.
    The goddess of prosperity or fortune, and the goddess of adversity or misfortune, two sisters, mentioned in this proverb, exercise a mysterious influence over the minds of the vulgar. These remarkable beings are said to have been produced when the celestials, in search of ambrosia, churned the milky ocean. The opinion expressed in the proverb is also contained in a stanza of Nitinerivillakkam a poem on moral subjects, justly admired by the learned, for the terseness and beauty of its composition, as well as for the general purity of its moral sentiments. The poet says:—
    “When the goddess of prosperity finds that her favours are not appreciated, she introduces her elder sister, the goddess of adversity, to the sluggard, and then takes her departure.”
    The goddess of fortune, whose presence is a guarantee for happiness and prosperity, is said to dwell in the face of a horse of superior caste,-with the wise and good,-in all fragrant flowers,-in the tree of paradise that bestows whatever it’s votaries may desire,-in the beauty of a good and obedient wife,-in the ocean,-in the portal of a house when a marriage is being celebrated,-in a well governed country,-in grain,-in brilliant lamps and flaming torches,-in the words of the great,-with truth-speaking men,-in the arrows of Cupid,-and in vessels of milk.
    The goddess of misfortune is said to have her habitation with the glutton,-the irascible,-with liars and other abandoned characters,-with those clothed in rags,—with vicious women,-in a flock of sheep, and in the face of the dead.

  18. நடந்தால் நாடு எல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.
    The whole country is friendly to one who is active, his own mat is at enmity with the sluggard.

  19. நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே.
    If allowance for a journey is provided, gold sandals will be used.

  20. நடவுக்குத் தெளி நாலத்தொன்று.
    The yield of rice is a fourth part of that planted.

  21. நடு உழவிலே நந்தை தெறித்ததுபோல.
    Like the snapping of the yoke tie when the plough has done half its work.

  22. நடு ஊரில் நச்சுமரம் பழுத்து என்ன?
    Of what use is the ripening of the fruit of a poisonous tree in the middle of a village?

  23. நடுக்கடற் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர்.
    Though you go to the middle of the sea, return uninjured.

  24. நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?
    Can one retain self-respect who receives alms in the middle of the road?

  25. நடுத்தரமானவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்றவைத்தால் மாறும்.
    A fracture in gold vanishes when exposed to the fire; in like manner the anger of the good passes away.

  26. நடுவு நிலைமை உடையவர்க்குச் செய்த உபகாரம் கொஞ்சக்காலத்திற்கு நிற்கும்; அதுபோல, தாமரையில் விழுந்த மழைத்துளி நிற்காமல் மறையும்
    A benefit conferred on the indifferent is remembered for a short time, so a drop of rain on a lotus leaf vanishes soon.

  27. நடை சிறிதாகில் நாள் ஏறும், படை சிறிதாகிற் பயம் ஏறும்.
    If one’s pace be slow he will be long on the way, if an army be small, its anxiety will be great.

  28. நஷ்டத்துக்குப் பலர் நயத்துக்கு ஒருவனோ?
    Is one to have the gain, and many to share the loss?

  29. நஷ்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன்.
    One loses, one gains.

  30. நட்டாற்றிலே கைவிடுகிறது நன்மையா?
    Is it kind to abandon one in the middle of a river?

  31. நட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா?
    Does not the child of a drummer know how to drum?

  32. நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்டவேண்டுமா?
    Does the child of a drummer require a preceptor?

  33. நண்டுக் குடுவையை நடுத்தெருவில் உடைத்ததுபோல.
    Like breaking in the middle of the street a pot containing crabs.

  34. நண்டு கொழுத்தால் வளையில் இராது.
    The crab will not remain in its hole when it becomes fat.

  35. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல.
    Like setting a jackal to watch a roasted crab.

  36. நண்பொருள் கொடுத்து நன்றாய் ஓது.
    Pay the teachers fee, and learn well.

  37. நத்த வாழையிலை நித்தம் காற்பணம்.
    A village plantain leaf always costs a quarter fanam.

  38. நத்தை வயிற்றில் முத்துப் பிறந்தது.
    Pearls are produced in the belly of an oyster or snail.

  39. நந்த வனத்து ஆண்டிக்கும் முயல் வேட்டைக்கும் எத்தனை தூரம்.
    How distant are the occupations of the mendicant of the grove, and of the hare-hunter.

  40. நபாப் அத்தனை ஏழை புலி அத்தனை சாது.
    Poor as a Nabob, and gentle as a tiger.

  41. நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக்கொண்டது.
    The hair of the head is seized by his hand.

  42. நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும், உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
    Though he may give four children to Yama, he will not give one to his relatives.

  43. நமன் எடுத்துக்கொண்டு போகும்பொழுது நழுவி விருந்தவன்.
    He slipped and fell when Yama was carrying him off.

  44. நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
    Is there a soul that Yama knows not, is there a tank unknown to the crane?

  45. நம்ப வைத்துக் கழுத்து அறுக்கலாமா?
    May you cut a man’s throat after ingratiating yourself in his confidence?

  46. நம்பின பேரை நடு ஆற்றில் விடலாமா?
    May you leave in the middle of the river, those who have confided themselves to your care?

  47. நரி ஊரைவிட்டுப் புலி ஊருக்குப் போனேன் புலி ஊரும் நரி ஊராயிற்று.
    Leaving the region of jackals I went to that of the tigers, and that became a region of jackals.

  48. நரி ஒரு சாலுக்கு உழப்போனது.
    The jackal is gone to plough.

  49. நரி கூப்பிட்டுக் கடல் முட்டுமா?
    Will the howling of the fox reach the sea?

  50. நரி கூப்பிடு கடல் முட்டிப்போகும்.
    The howling of the jackal will reach the ocean.

  51. நரி கொழுத்தால் வளையில் இராது.
    If the jackal becomes fat, it will not remain in its hole.

  52. நரி கொழுத்து என்ன காஞ்சிரம் பழுத்து என்ன?
    What if the jackal becomes fat, or the gall-nut ripen?

  53. நரிக்குட்டிக்கு ஊளை பழக்கவேண்டுமா?
    Is the young jackal to be trained to howl?

  54. நரிக்குப் பெரியதனம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.
    If the jackal gains the mastery, he will demand two sheep from every flock.

  55. நரி நாலு கால் திருடன் இடையன் இரண்டு கால் திருடன்.
    The jackal is a quadraped thief, the shepherd is a biped thief.

  56. நரிமுன்னே நண்டு கரணம் போட்டதுபோல
    As the crab made somersaults before a jackal.

  57. நரியின் கையிலே குடல் கழுவக் கொடுக்கிறதா?
    Are viscera to be given into the hands of a jackal to be washed?

  58. நரிவாலைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறதுபோல.
    Like measuring the depth of the ocean with the tail of a jackal.

  59. நரை திரை இல்லை, நமனும் அங்கு இல்லை.
    He is not grey nor wrinkled; Yama is not there.

  60. நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
    Evil communications will bring distress.

  61. நல் இனதில் நட்பு வலிது.
    Friendship is stronger than close relationship.

  62. நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும்
    A good man’s life may continue forty days.

  63. நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன?
    A good letter-destiny-being in the middle, how were the crooked letters put in?

  64. நல்ல அமைச்சு இல்லாத அரசு விழி இன்றி வழிச்சொல்வோன் போலாம்.
    A king without a good counsellor, is like a wayfaring man who is blind.

  65. நல்லது கெட்டால் நாய்க்கும் வழங்காது.
    When the good becomes bad, even a dog will not use it.

  66. நல்லதுக்கு ஒரு பொல்லாதது, பொல்லாததுக்கு ஒரு நல்லது.
    A good husband may have a bad wife, and a bad husband may have a good wife.

  67. நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி.
    One who holds a fourth share in a prosperous family.

  68. நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாது போகிறவழியே போகிறது.
    If you do good and walk in the middle of the road, the evil will find its own way.

  69. நல்லது நாற்கலம், ஊத்தை ஒன்பது கலம்.
    Of the good only four kalams, of the bad nine kalams.

  70. நல்ல நாளையில் நாழிப் பால் கறவாதது கன்று செத்துக் கலப்பால் கறக்குமோ?
    In its best days the cow gave scarcely a measure of milk, will it yield a kalam after its calf is dead?
    This proverb may refer to the fact that milch, cows in this part of India and in Ceylon refuse to give their milk in the absence of the calf. The cow when going to a neighbouring house to be milked, is accompanied by its calf which is often muzzled like a dog. When the milkman is about to draw the milk he allows the calf to suck for a few moments and then tying it to the fore leg of the mother, he draws the milk, while she stands quiet licking her offspring. Cows do sometimes allow their milk to be taken when the calf is absent but it not infrequently happens that the cow refuses to give her milk, and the calf is fetched from the homestead to encourage the mother
    If a calf die, its skin may be dried and stuffed. The cow deceived by the device licks the effigy of her calf and yields her milk.

  71. நல்ல நினைவை அனுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.
    Entertaining good thoughts, is in fact leaving evil thoughts.

  72. நல்லபாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியதுபோல.
    As the earth-worm imitated the graceful movements of the cobra.

  73. நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது, நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது.
    A good tree yields not poisonous fruit, nor a poisonous tree good fruit.

  74. நல்ல மரத்தில் முளைத்த புல்லுருவிபோல.
    Like a mistletoe growing on a good tree.

  75. நல்ல மாடு ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?
    If the cow be a good one, will it not find a purchaser in its own village?

  76. நல்ல மாட்டிற்கு ஒரு அடி, நல்ல பெண்ணுக்கு ஒரு சொல்.
    A good bullock requires but one blow, and a good woman only one word.

  77. நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார்.
    Though it is before them the virtuous will not kill even a cobra.

  78. நல்லவன் என்ற பெயர் எடுக்க நாட் செல்லும்.
    Time must elapse before one can get a good name.

  79. நல்லவர்கள் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்; அதுபோல, பனை ஒரு நாள் விதைத்துத் தண்ணீர் விட்டவனுக்குப் பலன் கொடுக்கும்.
    The good never forget a benefit; in like manner a palmyrah tree yields its produce to him who planted and watered it.

  80. நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
    If there be but one good man present in a suit, the greatest difficulties will be solved.

  81. நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான்.
    He spoke conciliatory words, and touched my chin cringingly.

  82. நல்ல இளங்கன்றே துள்ளாதே.
    My good young calf, dont be frisky.

  83. நல்லறம் உள்ளது இல்லறம்.
    Domestic virtue is excellent.

  84. நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.
    He is a good servant, but the river carries him away.

  85. நல்ல உடலுக்கு இளைப்பாற்றி கொடாவிட்டாலும் நாவிற்குக் கொடு.
    Though you may not give rest to your body, give rest to your tongue.

  86. நல்லவர்கள் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர்போல உதவும்.
    The friendship of the good will prove useful like water falling on good soil.

  87. நல்லாரைக் கண்டால் நாய்போல, பொல்லாரைக் கண்டால் பூனைபோல.
    If he sees the good, a dog, if he sees the wicked, a cat.

  88. நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.
    If one abuses his tongue by slandering the virtuous, maggots will drop from his teeth.

  89. நல்லாரும் நல்ல பாம்பைப்போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை.
    The good, like the cobra, sometimes restrain their power and conceal themselves.

  90. நல்லாரை நாவில் உரை, பொன்னைக் கல்லில் உரை.
    Test the good by the words of the tongue, and gold on a touchstone.

  91. நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
    The good and the bad may be known by their conduct.

  92. நல்லோர் ஒருவருக்குப் பெய்யும் மழை எல்லாருக்கும் ஆம்.
    The rain that falls on account of one virtuous person, is beneficial to all.

  93. நல்லோர் நடக்கை தீயோருக்குத் திகில்.
    The acts of the virtuous are a terror to the wicked.

  94. நல்லோன் என வளர், நாட்கள் பாரேல்.
    Grow up virtuous, observe not days.

  95. நற்குணமே நல்ல ஆஸ்தி.
    A good disposition is the best treasure.

  96. நற்பெண்டீர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.
    When a faithful wife finds a good thing, she will keep it for her husband.

  97. நனைத்துச் சுமக்கலாமா?
    Would you wet your burden!

  98. நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகிற்குச் சேதம்.
    If the old man arive wet, there will be a consumption of dry fire wood.

  99. நன்மை செய்தார் நன்மை பெறுவார், தீமை செய்தார் தீமை பெறுவார்.
    Those who do good, obtain good; and those who do evil receive evil.

  100. நன்மை செய்யத் தீமை விளையாது.
    Evil will not spring from well-doing.

  101. நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.
    It is the greatest loss to destroy that which is good.

  102. நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.
    Good and evil are apparent in the present state.

  103. நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.
    To promote good and to diminish evil is the right way.

  104. நன்மைக் கடைப்பிடி
    Persevere in that which is good.

  105. நன்றாய் இருந்ததாம் நல்லிசுட்ட பணிகாரம்.
    The cakes prepared by Nalli are said to be excellent.

  106. நன்றி மறவேல்.
    Forget not a benefit.

  107. நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதைபோல.
    Like the story of killing a mungoose that had done well.
    The tale is-a mungoose seeing a deadly snake approach a sleeping infant, killed it. When the mother returned from the well she saw blood on the animal, and imagining that it had bitten her child she killed it.