நே.
-
- நேத்திர மணியே சூத்திர அணியே.
- The apple of the eye, is an ingenious piece of mechanism.
-
- நேயமே நிற்கும்.
- Love alone will abide.
-
- நேரா நோன்பு சீர் ஆகாது.
- Fasting without a vow is not good.
-
- நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசம் ஆகார்.
- Though repeatedly told, the base take no heed.
-
- நேர்பட ஒழுகு.
- Behave evenly or agreeably.
-
- நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.
- The bald headed woman who came but yesterday, is whining for ghee to eat with her rice.
-
- நேற்று வந்தானாம் குடி; அவன் தலையில் விழுந்ததாம் இடி.
- It is said that he took up his abode only yesterday, and he has been struck by lightning.