Tamil Proverbs
translated by Peter Percival
மொ
3767036Tamil Proverbs — மொPeter Percival

மொ.

  1. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி இட்டதுபோல.
    Like joining a bald head and the knee, by tying a knot of hair.
    An impossibility.

  2. மொட்டைத் தலையில் பட்டம் கட்டி ஆள வந்தானோ?
    Has he come to reign with a crown on his bald head?

  3. மொட்டைத் தலையில் பேன் சேருமா?
    Will lice attach themselves to a bald head?

  4. மொட்டைத் தலையிற் பேய் வருமா?
    Will a demon come on a bald head?

  5. மொட்டைத் தலையிற் பேன்போல.
    Like a louse on a bald head.

  6. மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.
    A bald-headed man fears not to fight.

  7. மொட்டைத் தலைக்கு ஒரு கொட்டுக் கூடை, மோழைத் தலைக்கு ஒரு தாற்றுக் கூடை.
    To a bald head, a cup-shaped basket, to a hornless head, a basket of goads.

  8. மொட்டைத் தலையன் முழு மோசக்காரன்.
    A bald-headed man is a perfect cheat.

  9. மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.
    A noseless man, fit for a bald woman.

  10. மொண்டு ஆளுகிற வீட்டில் கொண்டு ஆண்டால் நிறையுமா?
    Will an affluent household be content to live from hand to mouth?

  11. மொத்தைச சோற்றுக்கு மேளம் அடிக்கிறான்.
    He beats a tomtom to get a mouthful of rice.

  12. மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
    A promise breaker is in the wrong way.

  13. மொழி தவறாதான் வழி தவறாதான்
    He who is true to his word, swerves not from rectitude.

  14. மொழிவது மறுக்கின், அழிவது கருமம்.
    If one break his promise, his undertaking will fail.

  15. மொழிவது அற மொழி.
    Speak decisively.