வெ.
-
- வெங்கண்ணை வாங்கு உன் கண்ணைக் கொடுத்து.
- Give your eyes in exchange for white-eyed fish.
-
- வெகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்
- The sayings of the many involve duty.
-
- வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?
- Can butter be melted without heat?
-
- வெட்கம் கெட்டாலும் கெடட்டும், தொப்பையில் இட்டால் போதும்.
- It matters little if his honour is at stake, it is enough if his paunch be filled.
-
- வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்திரிக்குப் போகாது.
- She who is not restrained by modesty, is not a woman of superior birth.
-
- வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்.
- A woman without shame is worthless.
-
- வெட்கப்படுகிற வேசியும் வெட்கம் கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்
- Shame in a prostitute, and want of modesty in a wife, are equally out of place.
-
- வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏது?
- What signifies a veil to a widow who goes about without shame?
-
- வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா?
- Will he who is afraid of disgrace quarrel?
-
- வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.
- He that is afraid of disgrace is afraid of running into debt.
-
- வெட்கத்தை விற்றுக் கக்கத்திலே கொண்டுபோகிறான்.
- Having sold his sense of shame, he carries its price under his arm.
-
- வெட்கம் கெட்டவனுக்கு மேனி எல்லாம் அழுக்குத்தான்.
- The whole body of the shameless, is dirty.
-
- வெட்டப் பலம் இல்லை வெட்டிக்குப் போக மனம் இல்லை.
- He is too weak to cut, and unwilling to go out.
-
- வெட்ட வெளியிலே வையாளி விடுகிறதா?
- Would you let loose a frisky calf in an open plain?
-
- வெட்டிக்கு இறைத்து விழலுக்குத் தண்ணீர் கட்டினதுபோல,
- Like irrigating for no purpose.
-
- வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.
- When he is told to reap and bring, he pounds and brings.
-
- வெட்டிவேரில் விசிறியும், விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு.
- Make a fan of the cuscus root, and a tat of sweet scented grass root.
-
- வெட்டின இடத்தில் சலம் ஊறும், வீடு கட்டின இடத்தில் நடை ஏறும்.
- Where the ground is dug water will spring, where a house is built there will be an entrance.
-
- வெட்டி எல்லாம் தண்ணீர், மண் கட்டி எல்லாம் புல் நாற்று
- There is water all over the path, young grass all over the sod.
-
- வெட்டிவெட்டிப் பார்த்தாலும் முட்டக் கரிக்காசுதான் அகப்படும்.
- Though you may examine by continued digging, you will get only coin of coal in abundance.
-
- வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?
- Did they give birth to me in vain, and throw me at a hedge?
-
- வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும்.
- Let the Vettiyan and the corpse embrace each other, and weep.
-
- வெட்டின குளத்திலும் தண்ணீர் குடியாது கட்டின வேலியும் தாண்டமாட்டாது.
- It neither drinks in an artificial reservoir, nor leaps an artificial hedge.
-
- வெட்டினவனுக்கு ஒரு கேணி வீணாதி வீணனுக்குப் பல கேணி.
- He that has sunk a public well has only one, a notorious idler has many.
-
- வெட்டு ஒன்று கண்டம் இரண்டு.
- One cut, two slices.
-
- வெட்டென உரையே துட்டர்கள் அறைவர்.
- The wicked speak harshly.
-
- வெட்டெனப் பேசேல்.
- Do not speak harshly.
-
- வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல.
- As an elephant entered a brass vessel bazaar.
-
- வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருள் ஆகும்.
- When a brahmany kite crosses one from right to left, he may become possessed of the wealth of all.
-
- வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?
- Having butter, would you weep for ghee?
-
- வெண்ணெய் திரளுகிறபோது தாழி உடைந்தாற்போல.
- As the churn broke just as the batter was forming.
-
- வெண்ணெய் உருக்குகிறதற்குள்ளே பெண்ணை ஆற்றிலே தண்ணீர் வருகிறது.
- Ere butter can melt, freshes appear in the Pennar.
-
- வெந்த சோற்றைத் தின்று வந்தது எல்லாம் பிதற்றுகிறான்.
- He eats his rice, and talks at random.
-
- வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது
- Hating one’s rice, and dying when the time comes.
-
- வெந்ததுபோதும் முன்றானையிலே கொட்டு.
- It is boiled enough, put it into the end of my cloth.
-
- வெந்ததைப் போடு முன்றானையிலே
- Put what is boiled into my cloth.
-
- வெந்த புண் வினை செய்யாது.
- No evil consequences can arise from a burn.
-
- வெந்தயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை.
- A curry with vendayam in it needs not be questioned.
-
- வெந்தயம் போடாத கறியும் கறி அல்ல, சந்தை இல்லாத ஊரும் ஊர் அல்ல.
- A curry made without vendayam-Trigonella Fœnum Grœcum-is not a curry, a village without a market is not a village.
-
- வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.
- The flavour of an onion will be known after it is boiled.
-
- வெந்நீரிலே வீடு வேகுமா?
- Can a house be burnt down with hot water?
-
- வெய்யிலிலே போட்டாலும் உலரான், தண்ணீரிலே போட்டாலும் நனையான்.
- He will not dry in the sunshine, nor dissolve in water.
-
- வெய்யோன் வெயில் முன் எரி தீபம்போல.
- Like a burning lamp in sunshine.
-
- வெல்லப் படை இல்லை, தின்னப் படை உண்டு.
- No army to conquer, though there are enough to consume.
-
- வெல்லப் பானையை எறும்பு மொய்த்ததுபோல,
- As the ants swarmed on a pot of sugar.
-
- வெல்லப் பானையை ஈக்கள் மொய்த்துக்கொண்டதுபோல.
- As the flies swarmed on a pot of sugar.
-
- வெல்லம் சாப்பிடுகிறவன் ஒருவன் விரலைச் சூப்புகிறவன் ஒருவன்.
- One eats the sugar, another licks his fingers.
-
- வெல்லப் போனான் ஒரு செல்லப்பிள்ளை மெல்லப் போனாள் ஒரு அமுங்குத் தலையன்.
- A pet child went to conquer, a flat-headed fellow followed him slowly.
-
- வெல்லாது உங்கள் படை செல்லாது பாண்டியன்முன்.
- Your army will not conquer, nor even oppose Pandya.
-
- வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்னவாம், மெய்ஞ்ஞானி துர்மார்க்கனானால் அஞ்ஞானி எப்படி ஆவான்?
- If light become darkness, what will the darkness be; if a wise man becomes wicked, what a great fool he will be?
-
- வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி
- The exterior is the mirror of the interior.
-
- வெளுத்தது எல்லாம் பால் கறுத்தது எல்லாம் தண்ணீர்
- Every thing white is milk, and every thing black is water.
-
- வெளுத்து விட்டாலும் சரி சும்மா விட்டாலும் சரி.
- It will be all the same whether he is punished or let go.
-
- வெள்ளம் பள்ளத்தை நாடும் விதி புத்தியை நாடும்.
- The flood inclines to a hollow, fate follows the intention.
-
- வெள்ளம் வருவதற்குமுன் அணை கோலிக் கொள்ளவேண்டும்.
- One should raise the dam before the flood comes.
-
- வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.
- The city where cucumbers were sold.
-
- வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அழுகிறதாம்.
- It is said that the tiger is fallen down and crying for grief because the goat was wet.
-
- வெள்ளாடு குழை தின்றதுபோல.
- As the goat crops leaves.
-
- வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தால் விழுந்து விழுந்து கும்பிட வேண்டும்.
- If a servant girl, be possessed of a devil, all must fall down before her.
-
- வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப் போயிற்று
- The child brought forth by a servant girl, died at sunrise.
-
- வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?
- Are a maid servant and a wife, on an equality?
-
- வெள்ளாளன் மரபே மரபு கள்ளர் திருட்டே திருட்டு.
- Of all ranks that of the Vellala is foremost, of thefts that of the Kallar is notorious.
-
- வெள்ளாளன் கெடுக்காவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும்.
- If the Vellala did not procure your ruin, his white olas will destroy you.
-
- வெள்ளாளன் மினுக்குப்பண்ணிக் கெட்டான், வேசி சளுக்கும் பண்ணிக் கெட்டாள்.
- The Vellala was ruined by adornment, the harlot by finery.
-
- வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.
- The Sanscrit of a Vellala, and the Tamil of a brahman, are equally faulty.
-
- வெள்ளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மை அல்ல.
- Agriculture not performed by Vellalas, is no agriculture.
-
- வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.
- A Kallála family in a Vellála house.
-
- வெள்ளிக்கு எதிரே போனாலும், வெள்ளாளனுக்கு எதிரே போகலாகாது.
- One may go before an evil star, but not before a Vellalan.
-
- வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி.
- Money laid out on silver ornaments, and that spent for firewood are equally a loss.
-
- வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா?
- Is a naked foot, the slave of a foot wearing silver ornaments?
-
- வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேண்டும்.
- I must have a silver platter with a rim of gold.
-
- வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போம்.
- The disease which blackens the skin, will be thoroughly cured by the white species of erukku and goats milk.
-
- வெள்ளை கொடுக்க வினை தீரும்.
- One’s sins will be expiated by giving cloth to the destitute.
-
- வெள்ளைக்குக் கள்ளம் இல்லை.
- White is faultless.
-
- வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
- The out-spoken are free from deceit.
-
- வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.
- A money-less goldsmith died by blowing iron.
-
- வெறிகாரன் குடியை விடான் வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான்.
- A drunkard will not forsake drinking, a fool is not afraid of evil deeds.
-
- வெறிகொண்ட யானை மிதந்து திரிகிறாப்போலே.
- As an elephant in rut wanders about unrestrained.
-
- வெறிக்கிட்டு அழியேல்.
- Squander not by drinking.
-
- வெறு நாய் சந்தைக்குப் போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டு வரும்.
- A dog which goes alone to the market, will be beaten with the steelyard.
-
- வெறும் கை முழம் போடுமா?
- Can the arm measure a cubit, when there is nothing to be measured?
-
- வெறும் சட்டி தாளிக்கிறான்.
- He flavours an empty chatty.
-
- வெறும் புளி தின்றால் பற் கூசும்.
- Tamarinds if eaten alone, will set the teeth on edge.
-
- வெறும் பானையில் ஈ புகுந்ததுபோல.
- As flies entered an empty pot.
-
- வெறும் பயலுக்கு ஏற்ற வீறாப்பு.
- Arrogance suited to one’s worthlessness.
-
- வெறும்பிலுக்கு வண்ணான் மாற்று.
- Finery borrowed from a washerman.
-
- வெறுவாய்க்கு இலைகெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாற் கொடி கிடையாது கொடி கிடைத்தால் விறகு கிடையாது.
- If a worthless fool go out to gather firewood, he cannot procure a creeper, when he gets a creeper, he can find no firewood.
-
- வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அகப்படடதுபோல.
- As a measure of bruised dried rice given to an old dame, who had nothing to chew but an empty mouth.
-
- வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்ததுபோல
- As one who had nothing to eat but an empty mouth obtained bruised rice.
-
- வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.
- He who has conquered is a perfect hero.
-
- வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசைக்கு மஞ்சளும்போல.
- Like water to the betel creeper, and saffron to a prostitute.
-
- வெற்றிலை போல் இருக்கும் மிகுந்த மரம் ஆகி விடும் புத்தி உள்ள பூமரத்துக்குப் பூவிரண்டு வக்கணையாம்.
- Its leaf is like betel leaf, it grows to a large tree, this intelligent tree has two flowers.